ஸ்பெஷல் க்ரிஸ்பி சிக்கன் வறுவல்

தேதி: January 2, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி - ஒரு கிலோ (சுத்தம் செய்து துண்டங்களாக்கியது)
முட்டை - ஒன்று
இஞ்சி, பூண்டு அரைத்த விழுது - 1.5 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் மாவு - 2 தேக்கரண்டி
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் பொரிக்க - 3/4 கப்


 

எண்ணெயைத் தவிர மற்ற பொருட்களை ஒன்றாக கலந்து 8 மணிநேரம் ஊறவிடவும்.
பிறகு எண்ணெயை காயவைத்து சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்தெடுத்து சூடாக பரிமாறவும்.


குறைந்தது 5 மணிநேரம் ஊறினாலே நல்ல சுவையாக இருக்கும். உள்ளே நல்ல மென்மையாகவும் வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும் இருக்கும். அரை கிலோ சிக்கன் மட்டும் எடுக்கிறீர்கள் என்றால் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்து கலக்குங்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

தளிகா
இதற்கு தயிர், எலுமிச்சை பழம் வேண்டாமா.
ஜலீலா

Jaleelakamal

வேண்டாம் ஜலீலாக்கா..சேர்த்தாலும் ப்ரச்சனைஎதுவும் இருக்காது என்று நினைக்கிறேன்..முட்டை சேர்ப்பதால் நல்ல மெதுவாக வரும்..நான் எலுமிச்சை சேர்ப்பதில்லை...
நான் கரம் மசாலா பொடியும் சேர்ப்பதில்லை...நேற்று குபூசுக்கு சேர்த்து கொடுத்து இங்கு எல்லோருக்கும் ரொம்பவும் பிடித்துப் போனது

நான் எப்போதும் கரம் மசாலா,சேர்ப்பேன் ,இதில் நான் சேர்க்காத அயிட்டம் தயிர் எலுமிச்சை, அரிசிமாவு
ஜலீலா

Jaleelakamal

நானும் மற்ற உணவுகளுகு வறுக்கும்போது சேர்ப்பேன்..ஆனால் குபூசுக்கு சேத்து சாப்பிட ரொம்ம்ப மசாலா வாடை என்னவோ போல் தோன்றும் அதனால் இஞ்சி பூன்டு கூட கொஞ்சமா தான் சேர்ப்பேன்..இனி அடுத்த முறை தயிர்/எலுமிச்சை சேத்து செய்து பார்க்கிறேன்

இதுவும் நன்றாக இருந்தது நன்றி. சாப்பிடும் போது நல்லா கிரிஸ்பியாக இருந்தது.

indira

நன்றி இந்திரா..நிறைய சமைத்து விட்டீர்கள் இல்லையா..எனக்கு மிகுந்த சந்தோஷம் இந்திரா.