கடைஞ்ச அரைக்கீரை

தேதி: January 2, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

அரைக்கீரை -- 1 கட்டு (சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வடிதட்டில் போடவும்)
சின்ன வெங்காயம் -- 10 என்னம் (வட்டமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 2 என்னம் (நீளமாக கீறியது)
சீரகம் -- 1 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
தாளிக்க:
கடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -- 4 என்னம் (பொடிதாக நறுக்கியது)
மிளகாய் வத்தல் -- 2 என்னம்
கறிவேப்பிலை -- இனுக்கு


 

அரைக்கீரையை ஒரு அடிகனமான பாத்திரத்தில் (மண் பாத்திரம் இன்னும் ருசியாக இருக்கும்) போட்டு உடன் வட்டமாக வெட்டிய வெங்காயம்,சீரகம்,பச்சை மிளகாய் சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
வெந்தவுடன் சூடாக கடைய வேண்டும்.
பின் தாளிக்க வாணலியில் எண்ணைய் 1 டீஸ்பூன் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு போட்டு பொடிதாக நறுக்கிய வெங்காயம் , வத்தல் , கறிவேப்பிலை போட்டு சிவக்க வறுத்து கொட்டு தேவையான உப்பு சேர்த்து கிளறி பறிமாறலாம்.


சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு கொடுக்கலாம் நல்லது.

மேலும் சில குறிப்புகள்