சைனீஸ் சேமியா நூடுல்ஸ்

தேதி: January 2, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சேமியா -- 1 கப்
கேரட் -- 1 என்னம்
பீன்ஸ் -- 5 என்னம்
குடை மிளகாய் -- 1 என்னம் (சிறியது) (பெரியது எனில் பாதி போதும்)
முட்டை கோஸ் -- 1/2 கப்
பெரிய வெங்காயம் -- 1 என்னம்
பச்சைமிளகாய் -- 2 என்னம்
இஞ்சி -- 1 துண்டு
பூண்டு -- 6 பல்
வெங்காயத்தாள் -- ஒரு கைப்பிடி
சோயா சாஸ் -- 1/2 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
எண்ணைய் -- 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் -- 1 டீஸ்பூன்


 

அனைத்து காய்கறிகளையும் நீளநீளமாக மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
சுமார் 5 அல்லது 6 கப் தண்ணீரில் சேமியாவை வேக வைத்து எடுத்து ஆறவைக்கவும்.
எண்ணையை காயவைத்து வெங்காயத்தாளை விட்டு மற்ற அனைத்தையும் வாணலியில் போட்டு உப்பு,சோயா சாஸ் சேர்த்து 5 நிமிடம் சிம்மில் வதக்கவும்.
வதங்குயதும் சேமியா,மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து கிளறி இறக்கி பறிமாறலாம்.
வித்தியாசமான சைனீஸ் சேமியா நூடுல்ஸ் ரெடி.


மேலும் சில குறிப்புகள்