சேமியா வெஜ் கட்லெட்

தேதி: January 2, 2008

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சேமியா -- 1/2 கப்
உருளைக்கிழங்கு -- 2 என்னம் (வேகவைத்து தோலுரித்து மசித்தது)
பீட்ரூட் -- 1 என்னம் (தோல் நீக்கி துருவியது)
கேரட் -- 1 என்னம் (தோல் நீக்கி துருவியது)
பட்டாணி -- 1/4 கப்
பெரிய வெங்காயம் -- 1 என்னம் (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் -- 3 என்னம் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி -- 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
புதினா -- ஒரு கொத்து (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை -- 1 டேபிள் ஸ்பூன் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
மைதா -- 1/2 கப் (சலித்து ஒரு கப் தண்ணீரில் கரைத்தது)
பிரட் தூள் -- 1 கப்
மிளகுத்தூள் -- 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் -- 1 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
எண்ணைய் -- பொரிக்க


 

சேமியாவை 2 அல்லது 3 கப் தண்ணீரில் வேகவைத்து வடித்து எடுக்கவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணையை காயவைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி,புதினா, மல்லித்தழை சேர்த்து 3 நிமிடம் சிம்மில் வைத்து வதக்கி பின் துருவிய கேரட், பீட்ரூட், பட்டாணியை சேர்த்து 3 நிமிடம் வதக்கி மசித்த உருளை, சேமியா, கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து கிளறி இறக்கவும்.
இதை உருண்டையாக உருட்டி கையால ஒரு அமுக்கி அமுக்கி கரைத்த மைதாமாவு கலவையில் முக்கி பிரட் தூளில் இரு பக்கமும் அமுக்கி எடுக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் இதை போட்டு இரு புறமும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
டொமோட்டோ சாஸுடன் பறிமாற ருசியான சேமியா வெஜ் கட்லெட் ரெடி.


மேலும் சில குறிப்புகள்