ரெட் பீன்ஸ்

தேதி: January 3, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரெட் பீன்ஸ் - 100 கிராம்
பல்லாரி - 1
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
மசாலாத்தூள் - 1 மேசைக்கரண்டி


 

ரெட் பீன்ஸை தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு வேக வைத்து கொள்ளவும். பல்லாரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும் மசாலா தூள் போட்டு வதக்கவும்.
வேக வைத்த பீன்ஸை மசாலாவில் போட்டு வதக்கவும்.
மிதமான தீ வைத்து கரண்டியால் நன்றாக மசித்து கொண்டே இருக்கவும்.
மசாலா நன்றாக சேர்ந்த பின் இறக்கி விடவும்.
இதை ப்ரெட் நடுவில் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்


மேலும் சில குறிப்புகள்