ஹாட் அன்ட் ஸ்வீட் தோசை

தேதி: January 3, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தோசை மாவு -- 1 கப்
சாம்பார் பொடி -- 1 டீஸ்பூன்
சர்க்கரை -- 1 டீஸ்பூன்
நெய் -- 1 ஸ்பூன்
எண்ணைய் -- தோசைக்கு ஊற்ற


 

தோசைக்கல்லில் தோசையை ஊற்றும் போது மெல்லிசாக ஊற்றாமல் ஊத்தப்பத்திற்கு ஊற்றுவ்து போல் ஊற்றாமலும் கொஞ்சம் திக்காக ஊற்றவும்.
அதன் மேல் சாம்பார் பொடியை பரவலாக (1 டீஸ்பூன் அளவில் பாதி போட்டால போதும்) தூவவும்.
சர்க்கரையை 3 சிட்டிகை அளவில் எடுத்து தோசையின் மேல் தூவி எண்ணையை (எப்போதும் தோசைக்கு ஊற்றுவது போல்) ஊற்றவும்.

திருப்பி போடு எடுக்கவும்.
இதற்கு தொட்டுக் கொள்ள நெய் வைத்துக் கொள்ளாவும்.
மிகவும் ருசியான ஹாட் அன்ட் ஸ்வீட் தோசை ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

சுபா, சுவையாக இருந்தது தோசை!ஆனால், இதில் சாம்பார் பொடிக்கு பதில் இட்லிக்குதொட்டுக்குவோமே,அந்த இட்லிமிளகாய்ப் பொடிஅதை தூவினால் இன்னும் ருசியாக இருக்கும் இல்லையா, எப்படியோ சூப்பர் தோசை!!
அன்புடன் விமலா.