www.arusuvai.com
அதிரசம்
தேவையானப் பொருட்கள்
- பச்சரிசி -- 1/2 கிலோ
- நல்லெண்ணைய் -- 1/2 லிட்டர்
- மண்டை வெல்லம் -- 400 கிராம்
- ஏலக்காய் -- 5 என்னம் (நசுக்கியது)
செய்முறை
-
-
-
-
- பச்சரிசியை ஊறவைத்து மாவாக இடித்து சலித்து ஏலக்காய் சேர்த்து வைக்கவும்.
- வெல்லத்தை தட்டி தண்ணீர் தெளித்து சிம்மில் வைத்து பாகாக காய்ச்சவும்.
- கொஞ்சம் ஒட்டும் பதம் வந்ததும் பாகை இறக்கி மாவை சேர்த்து கொஞ்சம் எண்ணைய் ஊற்றி பிசையவும்.(வாணலியில் வைத்து காய்ந்த எண்ணைய் என்றால் மொறு மொருப்பாக வரும்)
- வாணலியில் எண்ணையை காய வைத்து, எலுமிச்சம் பழ அளவு மாவு எடுத்து அதை பிளாஸ்டிக் கவர்/இலையில் எண்ணைய் தடவி மாவை தட்டி எண்ணையில் போடவும்.
- மெதுவாக திருப்பி சிவந்ததும் எடுத்து இரண்டு கரண்டியால் எண்ணையை பிழிந்து எடுத்து வைக்கவும்.
- பத்து நாள் வரை கூட கெடாமல் இருக்கும் .
- சுவையான அதிரசம் ரெடி.
-
-