குழந்தைகளின் டானிக்

தேதி: January 3, 2008

பரிமாறும் அளவு: இரண்டு குழந்தைகளுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

பொட்டுக்கடலை - 50 கிராம்
நாட்டு சர்க்கரை - 25 கிராம்
பூவன் வாழைப்பழம் - இரண்டு


 

பொட்டுக்கடலையை கருக விடாமல் இளஞ்சிவப்பாக வறுக்கவும்.
பொட்டுக்கடலை ஆறியதும் மிக்ஸியில் பொடித்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும். அதிலிருந்து இரண்டு மேசைக்கரண்டி அளவு எடுத்து கொள்ளவும்.
அதில் நாட்டு சர்க்கரையை மண் இல்லாமல் எடுத்து பொட்டுகடலை மாவுடன் கலக்கி பூவன் வாழைப்பழத்தை பிசைந்து கொடுக்கவும்.
நாட்டு சர்க்கரை கிடைக்காவிட்டால் சாதாரண சர்க்கரை போதும்.
இதை கொடுத்தும் கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர் கொடுங்கள்.


உங்கள் குழந்தைகள் அமுல் பேபி போல் கொழு கொழு என்று ஆகனுமா இதோ இதை டிரை பன்ணுங்க
ஆறு மாதத்திலிருந்து எத்தனை வயது வரை வேண்டுமானாலும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு இருமல் வந்தால் பொட்டுக்கடலை, சர்க்கரை, கொஞ்சம் மிளகு திரித்து வைத்து சாப்பிட கொடுத்தால் சளி இருமலுக்கு கேட்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இதில் பொட்டுகடலயை அரைக்கனுமா வேண்டாமா?
ஏன் என்றால் 6 மாத குழந்தைக்கு எப்படி சாப்பிட கொடுப்பது?(என் 6 மாத குழந்தைக்கு இன்னும் பல் வரவில்லை.)

ஹாய் சஞ்சு சாரிபா, பொட்டுகடலை ஆறியதும் மிக்சியில் பொடித்து கொள்ளனும். இப்ப தான் பார்த்தேன் நாளைக்கு திரித்தி விடுகிறேன்.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலீலா உடனே தெளிவு படுத்தினதுக்கு thanx

ஹாய் ஜலீலா உடனே தெளிவு படுத்தினதுக்கு thanx

ஜலீலா அக்கா,
வாழைப் பழம்கொடுத்தால் என் குழந்தைக்கு இருமல் வருகிறது.வெறு எந்த முறையிலாவது பொட்டுக்கடலை சேர்க்கலாமா?
நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லுங்க அக்கா.
அன்புடன்
விஜி

ராகி மாவுடன், பொட்டுகடலை, பதாம்,அரிசி மாவு, கோதுமை மாவு எல்லாம் கலந்து காய்ச்சி கொடுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா,
பாதாம் எப்படி குழந்தையின் உணவில் சேர்ப்பது?இன்று தான் ராகியுடன் பொட்டுக்கடலை சேர்த்து காய்ச்சிக் கொடுத்தேன்,சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டான்.அவல் கூட ஊட்டி விட்டேன்.இங்கு Baadaam powder கிடைக்குமா என்று தெரியவில்லை?

இன்னும் ஒரு சந்தேகம், கோதுமை& அரிசி மாவு அப்படியே சேர்க்கலாமா? இல்லை வறுத்து சேர்க்கனுமா?

டியர் விஜி
பாதம் , பிஸ்தா, ஜவ்வரிசி, பொட்டு கடலை, அரிசி, ராகி, கோதுமை இன்னும் பல ,, மிஷினில் கொடுத்து திரித்து கொள்ளனும் .
அப்படி இல்லையா அரை கப் ராகிக்கு ஒல்லாஅயிட்டமும் ஒரு மேசை கரண்டி வீதம் சேர்த்தால் போதும்.
காய்நத மிக்சியில் போட்டு திரித்து தனுடன் ராகி மாவு சேர்த்து நல்ல சலித்து கொள்லுங்கள்.
காய்ச்சும் போது பால் , சர்க்கரை,குங்கும பூ, ஏலம் பொட்டு காய்ச்சினால் நல்ல மணமாகவும், ருசியாகவும் இருக்கும் கட்ட்டி யாகவோ, தண்ணி யாக வோ காய்ச்சி கொள்ளலாம்.
காய்ச்சும் முறை, பவுடர் எல்லாமே என் குறிப்பில் இருக்கு பாருங்கள் புரியவில்லை என்றால் மறுபடி இங்கேயே சொல்கிறேன்.
என் பையன் கள் இருவருக்கும் fஆர்முலா பால் ஒத்து வரலை நான் ஆறு ஏழு மாதத்திலிரிருந்து வீட்டு உணவு தான் கொடுத்தேன்..

கோதுமை களி, ராகி பாணம், பால் சோறு, ரொட்டிபால், கிச்சிடி,பாம்பே டோஸ்ட் இது மாதிரி பல..
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலீலா உடனே தெளிவு படுத்தினதுக்கு thanx

Nattu Sakkarai Endral Enna? is it Panankalkandu?.

Jesus never fails

bhuvan vaalai matumthaan kodukka vendumaa,
endha vakai banana-um kodokkalaamaa pls enakku kurunkal
nanri

குழந்தைகளுக்கு பொட்டு கடலை கொடுத்தால் பல் முளைக்கும் போது எழுந்து நடக்கும் போது ஏற்படும் லூஸ் மோஷன் கட்டுபடும்,அதை அபப்டியே பவுடரா சாப்பிட்டா சரியாசாப்பிடமுடியாது, அபப்டியே அதை வைத்து கொன்டு பேசினாலோ சிரித்தாலோ புறை ஏறும்,

அதுக்கு சிறிது வாழைபழம்,சர்க்கரை சேர்த்து கொன்டால் ஈசியாக உள்ளே போகும், நம் நாட்டில் தான் குழந்தைகளுக்கு வாழைபழம் கொடுக்க யோசிக்கிறார்கள். வெளி நாடுகளில் ஆறு மாதத்தில் இருந்து கொடுக்கிறார்கள், எதுவும் இரவில் கொடுக்கவேண்டாம் பகலில் கொடுங்கள்.

Jaleelakamal