இறால் சொதி

image

வழங்கியவர் : malathi

தேதி : வியாழன், 03/01/2008 - 15:18

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

3
1 vote
Your rating: None
 

 

  • நடுத்தரமான இறால் - 10
  • தேங்காய் - ஒரு மூடி
  • சோம்பு - 2 தேக்கரண்டி
  • மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
  • மிளகு - 5
  • சீரகம் - கால் தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 8
  • பச்சை மிளகாய் - 2
  • புளி - ஒரு நெல்லிகாய் அளவு
  • கிராம்பு - 2
  • பட்டை - ஒரு துண்டு
  • எலுமிச்சம்பழம் - ஒரு மூடி
  • மாங்காய் - ஒரு சிறிய துண்டு (மாங்காய் கிடைக்காவிட்டால் பரவாயில்லை)

 

  • தேங்காயை துருவி அரைத்து பால் எடுக்கவும். முதல் பால் ஒரு டம்ளர் எடுக்கவும். இரண்டாவது பால் 3 டம்ளர் எடுக்கவும்.
  • மிளகு, சீரகம், சோம்பு, மல்லித்தூள் இவற்றை சேர்த்து அரைத்து எடுத்து வைத்திருக்கும் இரண்டாவது பாலில் இந்த மசாலாவை கரைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டை, கிராம்பு, அரை தேக்கரண்டி சோம்பு தாளிக்கவும்.
  • நீளமாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். கரைத்து வைத்திருக்கும் சொதியை ஊற்றவும்.
  • சொதியில் மஞ்சள்தூள், உப்பு, சுத்தம் செய்த இறால், உருண்டையாக உருட்டிய புளி (புளியை கரைக்க கூடாது) நைசாக சீவிய மாங்காய், இவை எல்லாவற்றையும் போடவும். நன்றாக கொதிக்க விடவும்.
  • சுமார் 15 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி வைக்கவும். இப்போது முதல் பாலை சேர்க்கவும். சொதி ஆறியதும் எலுமிச்சம்பழம் பிழியவும்.

Note:

இந்த சொதி சாதத்தில் போட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இறால் போடாமலும் இதை செய்யலாம். சொதி செய்து வத்தல் பொரித்து தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் வேறு சாப்பிட எதுவுமே வேண்டாம்.