உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

ஓய்ஸ்டெர் சாஸ் சிக்கன்

 


தேவையானப் பொருட்கள்

  • கோழி-1/2கிலோ
  • இஞ்சி பூண்டு விழுது-2மேசைக்கரண்டி
  • சோளமாவு(corn flour)-2மேசைக்கரண்டி
  • சோயாசாஸ்-2தேக்கரண்டி
  • மிளகு தூள்-1தேக்கரண்டி
  • ஓய்ஸ்டெர் சாஸ்(oyster sauce)-1மேசைக்கரண்டி
  • எண்ணெய்-பொரிக்க
  • கிரேவி செய்ய:
  • குடை மிளகாய்-1
  • பச்சை மிளகாய்-4(இரண்டாக கீறி வைக்கவும்)
  • பூண்டு-4பல்
  • வெங்காய தாள்(spring onion)-3
  • சின்ன வெங்காயம்-4
  • ஆய்ஸ்டெர் சாஸ்-2தேக்கரண்டி
  • சோளமாவு-1தேக்கரண்டி

செய்முறை

  • கோழியை சுத்தம் செய்து 2செ.மீ. அளவுள்ள துண்டுகளாக்கவும்.
  • கோழியுடன் இஞ்சி பூண்டு விழுது,சோள மாவு,சோயாசாஸ்,ஆய்ஸ்டெர் சாஸ்,மிளகு தூள் கலந்து 20 நிமிடம் ஊறவிடவும்.
  • சூடான எண்ணெயில் கோழிதுண்டுகளை மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு,வெங்காயம் போட்டு வதக்கி,பச்சை மிளகாய்,சதுரங்களாக வெட்டிய குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • ஓய்ஸ்டெர் சாஸ் சேர்த்து வதக்கவும்.
  • பொரித்த கோழி துண்டுகளை சேர்த்து கிளறி 1இன்ச் நீளத்தில் வெட்டிய வெங்காய தாள் சேர்த்து கிளறவும்.
  • சோள மாவில் 1/4தண்ணீர் கலந்து இதனோடு சேர்த்து கிளறவும்.
  • 1நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

குறிப்பு:

சோயாசாஸ் ஆய்ஸ்டெர் சாஸில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்க தேவையில்லை. கிரேவி செய்யும்போது அதிக தீயில் வைத்து செய்ய வேண்டும்.

வழங்கியவர்

கவிசிவா


comments