தேவையானப் பொருட்கள்
- கோழி-1/2கிலோ
- இஞ்சி பூண்டு விழுது-2மேசைக்கரண்டி
- சோளமாவு(corn flour)-2மேசைக்கரண்டி
- சோயாசாஸ்-2தேக்கரண்டி
- மிளகு தூள்-1தேக்கரண்டி
- ஓய்ஸ்டெர் சாஸ்(oyster sauce)-1மேசைக்கரண்டி
- உப்பு-1சிட்டிகை
- சர்க்கரை-1/4தேக்கரண்டி
- எண்ணெய்-பொரிக்க
- கிரேவி செய்ய:
- குடை மிளகாய்-1
- பச்சை மிளகாய்-4(இரண்டாக கீறி வைக்கவும்)
- பூண்டு-4பல்
- வெங்காய தாள்(spring onion)-3
- சின்ன வெங்காயம்-4
- ஆய்ஸ்டெர் சாஸ்-2தேக்கரண்டி
- சோளமாவு-1தேக்கரண்டி
- உப்பு-1சிட்டிகை
செய்முறை
- கோழியை சுத்தம் செய்து 2செ.மீ. அளவுள்ள துண்டுகளாக்கவும்.
- கோழியுடன் இஞ்சி பூண்டு விழுது,சோள மாவு,சோயாசாஸ்,ஆய்ஸ்டெர் சாஸ்,மிளகு தூள்,உப்பு,சர்க்கரை கலந்து 20 நிமிடம் ஊறவிடவும்.
- சூடான எண்ணெயில் கோழிதுண்டுகளை மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு,வெங்காயம் போட்டு வதக்கி,பச்சை மிளகாய்,சதுரங்களாக வெட்டிய குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- ஓய்ஸ்டெர் சாஸ்,உப்பு சேர்த்து வதக்கவும்.
- பொரித்த கோழி துண்டுகளை சேர்த்து கிளறி 1இன்ச் நீளத்தில் வெட்டிய வெங்காய தாள் சேர்த்து கிளறவும்.
- சோள மாவில் 1/4தண்ணீர் கலந்து இதனோடு சேர்த்து கிளறவும்.
- 1நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
-
-
-
குறிப்பு
சோயாசாஸ் ஆய்ஸ்டெர் சாஸில் உப்பு இருப்பதால் உப்பு அதிகம் சேர்க்க தேவையில்லை.
கிரேவி செய்யும்போது அதிக தீயில் வைத்து செய்ய வேண்டும்.அஜினமோட்டோ கோழி ஊறவைக்கும் போதும்,க்ரேவிக்கு வதக்கும் போதும் 1சிட்டிகை அளவு சேர்த்தால் சுவை கூடும்.