ஆந்திரா கோழி கிரேவி

தேதி: January 4, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

கோழி - 1/2 கிலோ
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
தனியாத் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 15
கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1 மேசைக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை - 1"துண்டு
பிரிஞ்சி இலை - 1
கறிவேப்பிலை - 2 கொத்து
மல்லித்தழை - 1/2 கப்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

கோழியை சுத்தம் செய்து இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், தயிர், உப்பு சேர்த்து பிசிறி 2 மணி நேரம் ஊற விடவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். முந்திரிப்பருப்பை அரைக்கவும்.
பச்சை மிளகாயுடன் மல்லித்தழை, சோம்பு, மிளகு சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
ஊற வைத்த கோழித்துண்டுகளை போட்டு கிளறவும்.
கோழி முக்கால் பாகம் வேகும் வரை அடிப்பிடிக்காமல் கிளறவும். தேவைப்பட்டால் 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
அரைத்த பச்சை மிளகாய் கலவை சேர்த்து கிளறவும். கோழி பதமாக வெந்ததும அரைத்த முந்திரிப்பருப்பை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.


காரம் அதிகம் சேர்க்காதவர்கள் பச்சை மிளகாய் அளவை குறைக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கவி, ஆந்திரா சிக்கன் மிகவும் நன்றாக இருந்தது. முந்திரிக்கு பதில் பாதாம் மட்டும் சேர்த்தேன். வீட்டிலுள்ள சிக்கன் பிரியர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. நன்றி உங்களுக்கு.

பாதாம் சேர்த்து செய்தீங்கலா? நானும் இனிமேல் பாதாம் சேர்த்து செய்து பார்க்கிறேன். நன்றி வின்னி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!