குழந்தையின் முதல் உணவு

தேதி: January 4, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

பொட்டுகடலை - மூன்று மேசைக்கரண்டி
அரிசி - ஒன்றரை மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
மிளகு - மூன்று


 

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் லேசாக வறுத்து பொடித்து கொள்ளுங்கள்.
ஒரு டம்ளர் தண்ணீரை உப்பு ஒரு பின்ச் போட்டு கொதிக்க வைத்து இந்த பொடியை ஒரு மேசைக்கரண்டி போட்டு கிளறிக் கொண்டே இருங்கள். கெட்டி ஆனதும் ஒரு சொட்டு நெய் விட்டு இறக்கி உங்கள் செல்ல குழந்தைக்கு இதை முதல் முதல் ஆரம்பியுங்கள்.
செரிலாக் மாதிரி கொடுக்கலாம்.பிறகு கொஞ்ச கொஞ்சமாக உருளை, கேரட் வேக வைத்து சேர்த்து கொள்ளுங்கள்.


பல் முளைக்கும் போது, நடக்கும் போது பேதியாகும் அதை தடுக்க பொட்டு கடலை கட்டுபடுத்தும். சோம்பு செரிக்க வைக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா இதற்கு புழுங்கரிசி தான் போடனுமா?

சுபா புழுங்கல் அரிசியே உபயோகிங்க. பச்சரிசி வயிறு வலிக்கும்னு சொல்லுவாங்க

KEEP SMILING ALWAYS :-)

By
Subhashini madhankumar

By
Subhashini madhankumar

குழந்தையின் முதல் உணவு
என்னபா ஒரு மெசேஜும் காணும் செய்து பார்த்தீர்களா இல்லை டவுட்டா
ஜலீலா

Jaleelakamal

எத்தனை மாதத்தில் இந்த உணவை கொடுக்கலாம்.

முதல் 6 மாதம் தாய்பாலைத் தவிர வேறு எதுவும் கொடுக்க கூடாது. 6 மாதம் கடைசியில் இந்த உணவை ஆரமிக்கலாம்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அன்புள்ள ஷக்கிலா

இந்த உணவை ஆறு மாதத்திலிருந்து ஆரம்பிக்கலாம்.

ராகி கஞ்சி ரொம்ப நல்லது அதுவும் கொடுக்கலாம்.
வெரும் சாதம் பிசைந்து பருப்பு ஊற்றி கொடுப்பர்கள் சில குழந்தைகளுக்கு அது முழுங்க கழ்டமா இருக்கும் உடனே மிக்சியில் அடித்து உள்ள போனா போதும் என்று உள்ள தள்ளுவார்கள் அது தப்பு முன்று , நாலு வருடம் வரை மிக்சியில் அரைத்தால் தான் சாப்பிடுவார்கள், ஆகையால் இப்படி கொடுத்தால் ஈசியா உள்ளே போகும் குழந்தைகளுக்கு.
மட்டன், சிக்கன் எலும்பு, வெஜ் இந்த மாதிரி சூப் செய்து கூட நல்ல பொடித்து வைத்துள்ள அரிசியில் தண்ணீருக்கு பதில் இந்த சூப் தண்ணீரில் கிளறி கொடுக்கலாம்.
ஜலீலா

Jaleelakamal

baby food is very fine, my baby is eating. so many many thanks.

By
Subhashini madhankumar

டியர் ஷுபாஷினி மந்திர்

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

உங்கள் குழந்தை விரும்பி சாப்பிட்டது எனக்கு மிகவும் சந்தோஷம்.
ஜலீலா

Jaleelakamal

madam please any one food and juice.

By
Subhashini madhankumar

ஆப்பில் ஜூஸ் கொடுங்கள்
யாருக்கு கேட்கிறீர்கள், குழந்தைக்கு என்றால் ஆப்பிலை நல்ல ஆறிய வென்னீர் ஊற்றி மிக்ஸியில் அடித்து நல்ல வடிக்கடி கொடுக்கனும்.
ஜலீலா

Jaleelakamal

your recipes is very good. my baby like it. many thanks madam.

By
Subhashini madhankumar

MY BABY BORN 7month. we live in yanbu. KSA. madam my daughter don't like the food 6years. she like the bicuites,lays and juice so please help me the any tips.

By
Subhashini madhankumar

முதலில் சிப்ஸ், ஜூஸ் எதுவும் கண்ணில் படுவது போல் வைக்காதீர்கள்.
என் குறிப்பில் பாருங்கள் குழந்தைகளுக்கு நிறைய உணவு இருக்கும் பார்த்து செய்து கொடுத்து பாருங்கள்.

எதுவுமே நீங்க பழக்க படுத்துவது தான்.

ஜலீலா

Jaleelakamal

எப்படி இருக்கிங்க, என் பெண் இன்னமும் Biscuts சப்பிடுவதை நிறுத்த முடியவில்லை.liv_52 கொடுக்கிறேன்.

By
Subhashini madhankumar

லூஸ் மோஷனுக்கு இந்த உணவை தயாரித்து கொடுங்கள்.

குழந்தை கள் நடக்க ஆரம்பிக்கும் போது எல்லா குழந்தைகளுக்கும் இப்படி ஆவது சகஜம் தான்,. தவழும் போதும் கீழே எது கிடைத்தாலும் ஒட்டு பிரக்கி வாயில் போடு வார்கள்.
ஜலீலா

Jaleelakamal