pongal..கொழுகட்டை செய்முறை pls.

எல்லார்க்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..
போகி அன்று என் அம்மா கொழுகட்டை செய்வார்கள் .. இலையில் செய்வார்கள் .
எனக்கு அது ரொம்ப பிடிக்கும் .. ஆனா இங்க fall leaves தான் இருக்கு .. எனக்கு அந்த மாதிரி இலையில் செய்ய முடியலனாலும் .. பிடி கொழுகட்டை செய்யணும் போல இருக்கு .. யாராவது செய்முறை கொடுங்களேன் ..
அது போல் சக்கரை பொங்கல் .. வெண் பொங்கலுக்கும் சேர்த்து கொடுங்க ..
குறிப்பு :-
fall leaves பச்சை கலரில் இருப்பதை வைத்து கொழுகட்டை செய்யலாமா ??

டியர் பாலம்மு
சர்க்கரை பொங்கல்,வெண் பொங்கல் ரெஸிபி நான் கொடுக்கவில்லை முதலே நிறைய பேர் கொடுத்துள்ளார்கள் ஆகையால் நான் கொடுக்கவில்லை.
இனிப்பு என்ற பகுதியை கிளிக் பண்ணுங்க சர்க்கரை பொங்கல் கிடைக்கும்.
சிற்றுண்டி என்ற பகுதியை கிளிக் செய்ங்க வெண் பொங்கல் கிடைக்கும், கொழுக்கட்டை அதுவும் சிற்றுண்டியில் இருக்கும் தெரியவில்லை என்றால் சொல்லுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

பாலம்மு சர்க்கரை பொங்கல்,வெண் பொங்கல்,அக்கார வடிசல் ரெஸிபி என் குறிப்பில் கொடுத்துள்ளேன் இந்த முறை பிடித்திருந்தால் செய்து பாருங்கள்.

டியர் பாலம்மு உங்களுக்காக முன்று பொங்கல் கொடுத்துள்ளேன்.
இது எனக்கு ரொமப் பிடிக்கும் ஆகையால் மாதத்தில் ஒரு முறை கண்டிப்பாக ஏதாவது ஒன்றை செய்து விடுவேன்.
நான் செய்யும் முறை இது, இன்னும் ஏதேவது டவுட் இருந்தால் வெஜ் எக்ஸ்பேட்ஸ் கிட்ட கேட்டு தெரிந்து கொள்ளவும்.
இன்னும் ஒன்று இதில் பச்சை கற்பூறம் சேர்ப்பார்கள் , அது நான் இது வரை வாங்கியதே இல்லை
ஜலீலா
ஜலீலா

Jaleelakamal

சர்க்கரை பொங்கல்
பச்சரிசி =2ஆழாக்கு[400கி]
பச்சை பருப்பு =1/2ஆழாக்கு[100கி]
முந்திரி =25கி
கிஸ்மிஸ் பழம் =25கி[உலர்ந்த திராட்சை]
ஏலக்காய் =6
பச்சை கற்புரம் =மிளகு அளவு
ஜாதிக்காய் =பாதி மிளகு அளவு
வெல்லம் =750கி
பால் =100கி
நெய் =100கி
அரிசியையும், பருப்பையும் 10நிமிடம் ஊறவைக்கவும்.
பச்சைகற்புரத்தையும், ஜாதிக்காயையும் 50கி பாலில் ஊறவைக்கவும்.
வெல்லத்தை பொடியாக தட்டிக்கொள்ளவும்.
ஒரு கடாயில் 1ஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சையும் வறுத்து கொள்ளவும்.
குக்கரில் அரிசியையும், பருப்பையும் கழுவி பாலுடன் 8கிளாஸ் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
வெல்லத்தில் 1/2கிளாஸ் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்தவுடன் குக்கரில் உள்ள பொங்கலில் கொட்டி கிளறவும். வறுத்த முந்திரி, திராட்சை போட்டு பச்சைக்கற்புரம் கலந்த பாலையும் ஊற்றி நெய்யை சேர்த்து கிளறி ஏலக்காயை தூளாக்கி போட்டு கிளறி இறக்கவும்.
பொங்கல் பானையில் வைப்பதானால் பாலை உற்றி பானையின் விளிம்பளவு அரிசி,பருப்பு கழுவிய தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
பொங்கி வரும்போது கையளவு அரிசியை 3முறை போட்டு விட்டு கொதிக்கும் தண்ணீரை கரண்டியால் எடுத்து விட்டு பின் அரிசி முழுவதையும் போட்டு வேகவிடவும்.
வேகும் அளவிற்கு தண்ணீர் தேவையானால் எடுத்த தண்ணீரை சேர்த்து கொள்ளலாம்.
நன்கு வெந்தபிறகு தட்டிய வெல்லத்தை போட்டு கரைந்தவுடன் நெய், தட்டிய ஏலக்காய், வறுத்த முந்திரி, திராட்சை, பாலில் ஊறிய பச்சைகற்புரம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு அடிபிடிக்காமல் கிளறி இறக்கவும்.
வெண்பொங்கல்;
------------
சர்க்கரைபொங்கல் போல் அரிசி, பருப்புடன் பால் சேர்க்காமல், உப்பு சேர்த்து அதே அளவு தண்ணீர் விட்டு குக்கரில் வேக விடவும். ஒரு கடாயில் 2தேக்கரண்டி எண்ணையும், 2தேக்கரண்டி நெய்யும் விட்டு 1ஸ்பூன் மிளகு, 1ஸ்பூன் சீரகம்[ஒன்றிரண்டாக உடைத்தும் போடலாம்] போட்டு பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய 2ப.மிளகாய், சிறிய இஞ்சி , கருவேப்பிலை, மல்லித்தழை, முந்திரி போட்டு வெந்த பொங்கலை கொட்டி கிளறி இறக்கவும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

மேலும் சில பதிவுகள்