சர்க்கரை பொங்கல்

தேதி: January 5, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - அரை டம்ளர்
பாசி பருப்பு - ஒரு மேசைக்கரண்டி (லேசாக வறுத்து கொள்ளவும்)
துருவிய வெல்லம் - அரை டம்ளர்
முந்திரி - ஐந்து
கிஸ்மிஸ் பழம் - ஐந்து
உப்பு - ஒரு பின்ச்
ஜாதிக்காய் பவுடர் - ஒரு பின்ச்
ஏலக்காய் - இரண்டு


 

அரிசியை களைந்து அத்துடன் பாசிப்பருப்பையும் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
குக்கரில் ஒன்னறை டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பின்ச் உப்பு சேர்த்து ஊறிய அரிசிபருப்பை சேர்க்கவும். பாதி வெந்ததும் வெல்லத்தையும் ஏலக்காயையும் சேர்க்கவும்.
வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொதித்து கொண்டிருக்கும் பாதி வெந்த அரிசியுடன் சேர்க்கவும்.
குக்கரை மூடி போட்டு தீயை மீடியமாக வைத்து மூன்றாவது விசில் வந்ததும் ஆஃப் பண்ணவும்.
நெய்யில் ஜாதிக்காய், முந்திரி, கிஸ்மிஸ் பழம் கருக விடாமல் வறுத்து போடவும். சர்க்கரை பொங்கல் குக்கரில் பதமாக பார்த்து செய்தால் ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும்.
வெல்லத்தை குறைத்து கொண்டு சிறிது சர்க்கரை, தேன் கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.


எனக்கு ரொம்ப பிடித்தது சர்க்கரை பொங்கல்,வெண் பொங்கல், அக்கார வடிசல்

மேலும் சில குறிப்புகள்


Comments

ரொம்ப அருமையா வந்தது. இன்று பூஜைக்கு செய்தேன். பாதி டின்னராகவும் ஆகிவிட்டது. குறிப்புகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!!!!
ஜாதிக்காய் என்னிடம் இல்லை... அதனை சேர்க்கவில்லை

Hope is just the part of the equation

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா,தூங்கப்போகலையா?

தூங்கினா சரிதான்.. இப்போதான் சர்வரில் கொஞசம் ஜாப் ஓடுது....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா.
US ல ஹேமா என்று ஒரு அருசுவை தோழி இருந்தாங்க.ரொம்ப நல்லா பேசுவாங்க.ஆனால் இப்போ எங்கேனே தெரியலே.எல்லோர்க்கும் அவங்களை பிடிக்கும்.நீங்களும் ஹேமா மாதிரி தான் பேசுரீங்க.அடுத்தவங்களை சிரிக்க வைப்பது ஒரு நல்ல விஷயம் இல்லையா?இப்படியே பேசுங்க,நாங்க எஞ்ஜாய் பண்ரோம்.

நீங்களும் நானும் சரியா 12 மணி நேர வித்யாசத்தில் இருக்கிரோம்... என்ன காபி ஆச்சா...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஆமாம்.12 ம்ணி நேர வித்தியாசத்திலே இருக்கோம்ல..
காபி இல்லை டீ.
ம்ம்ம்ம்..ஆச்சு.இவளை இப்போ சாப்பிட வைக்கனும்.அது தான் பெரிய வேலை.இலா.

People come and Go... The idea is to have fun when possible. I am glad you are enjoying my little comments. go ahead and fee your daughter.We will talk later

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

என்ன இலா சர்க்கரை பொங்கல் சூப்பரா ஆ ஆ ஆ
எனக்கு ரொம்ப பிடிக்கும், இதில் பச்சை கர்பூரம் சேர்ப்பார்கல், அது நான் சேர்த்தது கிடையாது.

எப்படியும் மாதம் ஒரு முறை என்னுடைய இனிப்பு உருண்டை சோறு, அக்கார வடிசல், சர்க்கரை பொங்கல் செய்து விடுவேன்.

ஜலீலா

Jaleelakamal