வெண் பொங்கல்

தேதி: January 5, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

வேகவைக்க:
பச்சரிசி - அரை டம்ளர்
பாசி பருப்பு - ஒரு மேசைக்கரண்டி முழுவதும் (லேசாக வறுத்தது)
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு பின்ச்
துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
நெய் - இரண்டு தேக்கரண்டி
முந்திரி - ஐந்து
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - மூன்று தேக்கரண்டி (இரண்டாக கிள்ளியது)


 

அரிசி, பருப்பு, உளுந்து அனைத்தையும் ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
மூன்று டம்ளர் தண்ணீரை குக்கரில் கொதிக்க விட்டு அரிசியை களைந்து போட்டு உப்பு, பெருங்காய பொடி துருவிய இஞ்சி சேர்த்து பாதி வெந்ததும் தாளித்து வேண்டியவைகளை தாளித்து கொட்டி குக்கரை மூடி மூன்றாவது விசில் வந்ததும் ஆஃப் பண்ணி விட்டு ஆவி அடங்கியதும் திறந்து தேவைப்பட்டால் சாப்பிடும் போதும் நெய் கொஞ்சம் சேர்க்கலாம்.


இஞ்சியை கட் பண்ணி போட்டால் யாரும் சாப்பிட மாட்டார்கள், துருவி வேக வைத்து விட்டால் நல்ல மணமாகவும் இஞ்சியும் உள்ளே போய் விடும் சாம்பார், உளுந்து வடை, பொட்டுகடலை துவையலுடன் சாப்பிடுங்கள். ரொம்ப சூப்பரா இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பின் ஜலீலா,

நேற்று காலை டிபனுக்கு வெண்பொங்கல் செய்தேன், இஞ்சி துருவிப் போடுவதற்கு பதிலாக, அரை ஸ்பூன் இஞ்சி பேஸ்ட் சேர்த்தேன். நன்றாக இருந்தது. நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதா லக்ஷ்மி அக்கா வெண் பொங்கல் நீங்களும் செய்து பார்த்தது எனக்கு மிக்க மகிழ்சி.உங்கள் பின்னூட்டத்துக்கும் நன்றி.( பொங்கல், பொட்டு கடலை சட்னி, உளுந்து வடை) எனக்கு ரொம்ப பிடிக்கும்

ஜலீலா

Jaleelakamal