வாழைத்தண்டு பொரியல்

தேதி: January 5, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைத்தண்டு - ஒரு கப்
பச்சைப்பருப்பு - 2 தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - 2 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - 2 (அ) 3
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி


 

சென்னை போன்ற ஊர்களில் வாழைத்தண்டு நறுக்கி கிடைக்கும். நறுக்காமல் வாங்கினால் லேசான வட்டமாக நறுக்கி, 1/2 வட்டமாக நறுக்கவும்.
பிறகு சேமியா போல் லேசாக நறுக்கி மோர் கலந்த தண்ணீரில் போடவும். இல்லையேல் கறுத்து விடும். பச்சைப்பருப்பை சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதங்கியவுடன் வாழைத்தண்டை பிழிந்து போட்டு பச்சைப்பருப்பையும் தண்ணீரில்லாமல் போடவும்.
சிறு தீயில் தண்ணீர் விடாமல் வதக்கி கொண்டே இருக்கவும். கடைசியாக உப்பு போட்டு தேங்காய்ப்பூ போட்டு கிளறி இறக்கவும்.


வாழைத்தண்டு அடிக்கடி சேர்க்கவும். சிறுநீர் கல் அடைப்பே வராது. வந்தாலும் கல் கரைந்துவிடும்.

மேலும் சில குறிப்புகள்