ஹைதராபாத் மட்டன் பிரியாணி.

தேதி: January 5, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (3 votes)

 

பிரியாணி அரிசி - 1 கப் (200 கிராம்),
மட்டன் - 1/4 கிலோ,
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 6,
இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி,
சின்ன வெங்காயம் - 5 (நைசாக அரைக்கவும்),
பப்பாளி - 1 சிறிய துண்டு(நைசாக அரைக்கவும் - 1/2 மேசைக்கரண்டி அளவு),
தயிர் - 1/2 கப்,
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி,
பட்டை - சிறிது,
கிராம்பு - 4,
ஏலக்காய் - 3,
புதினா - 1கைப்பிடி,
பிரிஞ்சி இலை - 1,
எலுமிச்சம் பழ சாறு - 1 மேசைக்கரண்டி,
ஜாதிக்காய்த்தூள் - 1/4 தேக்கரண்டி,
பால் - 2 மேசைக்கரண்டி,
குங்குமப்பூ - சிறிது,
முந்திரி - 6,
எண்ணெய் - 1/4 கப்,
நெய் - 2 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய் எல்லாவற்றிலும் பாதியை எடுத்து அரைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய மட்டன், அரைத்த பொடி, கீறிய பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், கரம் மசாலா, வெங்காய விழுது, பப்பாளி விழுது, பிரியாணி இலை, 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிது புதினா, 2 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி 3 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், சிறிது எண்ணெய் சேர்த்து, 3 கப் தண்ணீர் ஊற்றி முக்கால் பதம் வேக வைத்து வடித்து சிறிது உப்பு கலந்து வைக்கவும்.
வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி தனியாக வைக்கவும்.
பெரிய பாத்திரத்தில் நெய், எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் ஊற வைத்த மட்டனை அப்படியே கொட்டி வதக்கவும்.
நன்கு வதங்கிய பின் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். மட்டன் நன்கு வேக வேண்டும்.
கொஞ்சம் கிரேவியாக இருக்க வேண்டும். அதில் வேகவைத்த சாதம், வதக்கிய வெங்காயம், மீதி புதினா, எழுமிச்சம் பழச் சாறு சேர்த்து கலக்கி மூடி தம்மில் வைக்கவும்.
பிரியாணி வெந்ததும் பாலில் குங்குமப் பூவை கரைத்து தெளித்து மூடி ஐந்து வைக்கவும்.
முந்திரியை நெய்யில் வறுத்து மேலே தூவி பறிமாற சூப்பர், சுவையான ஹைதராபாத் பிரியாணி ரெடி.


தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை மூடி மேலே ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்தால் தம் ஆகிவிடும்.
கத்தரிக்காய் கிரேவி, ஆனியன் ரெய்த்தாவுடன் பறிமாற சுவை கூடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மட்டன் பிரியாணியில் பப்பாளிப்பழத்துண்டு போட்டு வேக வைக்க சொல்லி இருக்கிறீர்கள். எதற்காக பப்பாளிப்பழம் சேர்க்கவேண்டும்?

அன்பு மாலதி,
பப்பாளி சேர்த்தால் மட்டன் நன்றாக பஞ்சு போல் வேகும். சாதாரணமா நம்ம வீட்டில மட்டன் செய்யும் போது கூட ஒரு துண்டு பப்பாளி சேர்த்தால் மட்டன் சீக்ககரம், நன்கக வேகும். பிரியாணியில் மட்டன் நன்கு வெந்து இருந்தால்தான் சுவை கூடும்.அதுக்காகத்தான் பப்பாளி விழுது சேர்ப்பது.
இன்று கூட எங்கள் வீட்டில் இந்த பிரியாணி தான். ஒருமுறை இந்த மாதிரி பிரியாணி செய்துட்டா, திரும்ப வேறு மாதிரி செய்யவே தோணாது. அவ்வளவு ருசியாக இருக்கும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அக்கா கடைசியில் பிரியானியில் குங்குமப் பூ கரைத்து முடி ஐந்து நிமிடம் வைக்கவும்னா சொல்ரீங்க...அது போல் வெங்காய்த்தை சும்ம்மாஅ லேசா வதக்கினால் போதுமா இல்ல சில வகை பிரியானிகளில் நல்ல சிவ மொருமொருன்னு வறுத்திருப்பாங்க அது போல் வேனுமா
இதே முறையில் சிக்கன் செய்யும்பொழுதும் பப்பாளி வேன்டுமா

நான் சாதாரனமா போடுவது மாங்காய் இலை போல் இருக்கும்....ஆனால் ஒரு முறை பக்கத்து வீட்டீல் பெரிய வகை புல் போல் ஒரு இலை போட்டிருந்தார்கள்,,.பிரியனி இலை என்பது எது

ரூபி, daun paundan leaves (screwpine leaves) ஆ இருக்கும் நீ பாத்தது:-) அதான், ரம்பை இலை :-)

பிரியாணி இலை, மாங்காய் இலை போல தான் இருக்கும் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹாய் ரூபி,
குங்குமப்பூ கரைத்து தெளித்து, 5 நிமிடம் தம்மில் வைத்திருந்தால் தான் கலர் அங்கங்கே இறங்கி 2 கலர்ல அழகா இருக்கும்.
வெங்காயத்தை லேசாக வதக்கினால் போதும், மொறுமொறுவென வதக்க தேவையில்லை.
சிக்கனுக்கு பப்பாளி தேவையில்லை, அதான் சீக்கிரமே வெந்துடுமே, சேர்த்தாலும் தப்பில்லை.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வியக்கா ஐடியா மாறிப் போச்சு...சிக்கன் பிரியானி இதுபோல் செய்ய போரெண்.ஆனால் குங்குமம் இல்லை..அதுக்கு மணம் வித்யாசம் வராதே?கலர் தானே...என் மாமனார் பீட்ரூட்டை பொடியாகட் பன்னி கிளறி தம் போடுவார்...பரிமாறிப் பாத்தா சிவப்பும் ஆரஞ்சுமா சூப்ப்பரா இருக்கும்....அது போல் செய்ய போறேன்..

ரூபி,
அரப் உடுப்பி போனீங்களா??

இல்ல சுபா...இன்னும் போல்...எங்க சுபா போவவே பயமா இல்ல இருக்கு இப்பல்லாம்.ரீமா சாப்பிடவே விடமாட்டா வெளிய ஓடிட்டே இருப்பா..அதுவுமில்லாட்டி அடுத்த டேபிலில் இருப்பவங்களை தொந்தரவு பன்வா.அதனால இப்படி காசு அதிகம் கொடுத்து சாப்பிடும் எங்கயும் போரதில்ல..காசு தான் வேஸ்ட்...மேக் க்கு தான் இப்ப போரோம்...அதுவும் நகெட்ஸ் தான்...அப்ப கைல புடிச்ச்ஹுட்டே நானும் ஓடிட்டே சாப்பிடலாம்ல:-)
திவாகர் என்ன செய்வான்..சும்மா இருப்பானா?இல்ல இப்படி தானா?

செல்வீக்கா நேத்து ஹைதெராபாதி சிக்கன் பிரியானி செய்தேன்..நான் முன்பு செய்யும் விதத்தில் இருந்து சிறிய பித்யாசம் தான்..பாலும்,குங்குமமும் சேத்தலை...தம்மும் போடல சும்மா மூடி வெச்சேன் ஒரு 10 நிமிஷம்...ஆனால் சுவை அருமை..இன்னொரு சின்ன சேஞ் வெங்காயத்தை நல்ல மொருவலா தான் சேத்தேன்....ஹர்ஷ் தைரியமா செஞ்சு பார் நல்லா வரும்.ஈசி தான்..ரொம்ம்ப நன்றி செல்வீ

அன்பு ரூபி,
பாராட்டுக்கு நன்றி. இந்த பிரியாணி செய்முறை ஹைதராபாத்திலிருந்தே தெரிஞ்சுகிட்டேன். என் பொண்ணொட ஃபிரண்டோட அம்மாகிட்ட இருந்து. இதற்கு மட்டன்தான் செம டேஸ்ட். அதில ஒருநாள் செய்து பார். உனக்கே தெரியும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

aasa

அன்பு ருக்ஷானா,
என்ன சொல்ல வர்றீங்க? ஒன்றும் புரியவில்லை.
அன்புடன்,
செல்வி

அன்புடன்,
செல்வி.

ஹாய் ரூபி,
இந்த பதிவை இப்போ தான் பார்த்தேன்.
திவாகர் ஹோட்டலுக்கு போனா படுத்தத்தான் செய்வான்.
அவனுக்குன்னு தனி தட்டு வைத்து நாம் சாப்பிடுவதை கொஞ்சம் பிச்சி போட்டால் அதை சாப்பிட்டுக்கொண்டே சேட்டை பண்ணுவான்.
கையில் சாப்பாடு குழம்பு ஏதாவது பட்டுவிட்டால் க்ளீன் செய் என்று அடம்...
ஸ்பூன் வேண்டும் என்று பிடிவாதம்...
ஒரு தடவை அவன் புரோட்டாவை எடுக்கும் போது டேபிளின் மீது விழுந்துவிட்டது உடனே வெயிட்டரை கூப்பிட்டு க்ளீன் பண்ணாச் சொல்றான் ... பேசாத போதே இப்டி.. பேச ஆரம்பித்தால் நினைக்கவே பயமாக உள்ளது...
ஆனா பேபி சீட்டர் இருந்தால் அழகாக அதில் உட்கார்ந்து சாப்பிடுவான்....
அப்பளாத்தை கையில் கொடுத்தாலே போதும் அதை சாப்பிடுவதற்குள் நானோ அவரோ சாப்பிட்டு முடித்து அவனுக்காக வெயிட் பண்ணுவோம்....

என்ன ரூபி க்ளோபல் வில்லேஜ் போயாச்சா???
நான் இன்னும் போகவில்லை .. இவருக்கு எக்ஸாம் உள்ளது.. அதுதான்..

கொஞ்சம் இல்லை நிறையவே வேலை உள்ளது.. பொங்கலுக்கு வீட்டை நீட் பண்ணனும்....

இன்று எப்போதாவது விசிட் மட்டும் அடிக்க வேண்டியது தான்...