ஈசி பேரீச்சம் பழ அல்வா

தேதி: January 5, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - 1 கப்,
சர்க்கரை - 100 கிராம்,
பால் - 1 கப்,
கிரீம் - 50 மில்லி கிராம்,
கோவா - 100 கிராம்,
ஏலக்காய் - 2,
முந்திரி - 25 கிராம்,
வெள்ளரி விதை - 25 கிராம்.


 

பேரீச்சம் பழம், முந்திரி, வெள்ளரி விதையை பொடியாக நறுக்கவும்.
ஒரு மைக்ரோ பாத்திரத்தில் பேரீச்சம் பழத்தை பாலுடன் சேர்த்து மீடியம் பவரில் நான்கு நிமிடம் வேக வைக்கவும்.
பால் கலவை கெட்டியாகும், கோவா, சர்க்கரை சேர்த்து பாதி மூடியவாறு மைக்ரோ ஹையில் 6 நிமிடம் வைக்கவும். இடையில் ஒருமுறை கலந்து விடவும்.
கலவை நன்கு கெட்டியானதும் முந்திரி, வெள்ளரி விதை கலந்து ஹையில் 3 நிமிடம் வைக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டாக்கவும்.


மேலும் சில குறிப்புகள்