உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

திருநெல்வேலி சொதி

 


தேவையானப் பொருட்கள்

  • உருளைக்கிழங்கு - 3,
  • கேரட் - 1,
  • முருங்கைக் காய் - 1,
  • பெரிய வெங்காயம் - 3,
  • காய்ந்த மிளகாய் - 4,
  • தக்காளி - 3,
  • எலுமிச்சம் பழம் -1,
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
  • தேங்காய் - 1,
  • சீரகம் - 1 தேக்கரண்டி,
  • பூண்டு - 10 பல்,
  • உப்பு - தேவையான அளவு,
  • கடுகு - 1/2 தேக்கரண்டி,
  • கறிவேப்பிலை - 15,
  • எண்ணெய் - 3 ஸ்பூன்.

செய்முறை

  • கேரட், உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் தோல் சீவி, முருங்கைக்காயும் சேர்த்து சுமாரான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
  • தேங்காயைத் துருவி முதல் பால், இரண்டாம் பால் என எடுத்து வைக்கவும்.
  • காய்ந்த மிளகாய், சீரகத்தை நைசாக அரைத்து வைக்கவும், பூண்டை தனியாக அரைத்து வைக்கவும்.
  • இரண்டாவது பாலில் காய்களையும், வெங்காயத்தையும் வேக வைக்கவும்.
  • காய்கள் வெந்ததும், தக்காளியைப் போடவும்.
  • மிளகாய், சீரகம் அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்றாக கொதித்ததும், இறக்கி வைத்து முதல் பால், பூண்டு விழுது, எலுமிச்சம் பழ சாறு சேர்க்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.

குறிப்பு:

சாதம், இடியாப்பத்துக்கு பொருத்தமாக இருக்கும்.

வழங்கியவர்

இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

4 நபர்களுக்கு. 30 நிமிடங்கள்.
  random food image


comments