நேந்திர பழ பாயசம்

தேதி: January 6, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நேந்திரம் பழம் - 2,
தேங்காய் - 1 மூடி,
வெல்லம் - 150 கிராம்,
ஏலக்காய் - 2,
நெய் - 2 ஸ்பூன்.


 

நேந்திரம் பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
தேங்காயை துருவி முதல் பால், இரண்டாம் பால், மூன்றாம் பால் என எடுக்கவும்.
நேந்திரம் பழத்தை நெய்யில் வதக்கி, மூன்றாம் பாலை விட்டு பழம் நன்றாக வேகவிடவும்.
வெல்லத்தை தூள் செய்து, 1/4 டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி வெந்த பழத்துடன் சேர்க்கவும்.
10 நிமிடம் கழித்து இரண்டாம் பாலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
ஏலக்காயை தூளாக்கி சேர்த்து, முதல் தேங்காய் பாலையும் சேர்த்து கலக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வீக்கா இது கேரளாவில் ப்ரபலம்...எங்கள் வீடுகளில் பழத்தை வேக வச்சு அரச்சு பால் சேர்த்து கிளறிட்டே இருப்பாங்க...நான் செஞ்சதில்ல ஆனால் அப்படி தான் செய்வாங்க..இதனுடன் பத்திரி யை தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

ரூபி,
இது கேரளா ஸ்பெசல்தான். ஈரோட்டில இருக்கும் போது ஒரு மலையாள ஃபிரண்டட வீட்டில இருந்து ஓணத்தன்னிக்கு வரும். அவங்ககிட்ட இருந்துதான் கத்துகிட்டேன். இங்க நேந்திரம் பழமே கிடைக்ககறதில்லை:-(
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.