பனீர் பராத்தா

தேதி: January 6, 2008

பரிமாறும் அளவு: 10 சப்பாத்திகள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஸ்டஃப் செய்ய:
----------------------
பொடியாக நறுக்கிய பனீர் - 250 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 மேசைக்கரண்டி,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2.
உப்பு - தேவையான அளவு.
பராத்தாவுக்கு:
-------------------
கோதுமை மாவு - 3 கப்,
நெய் - 2 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.


 

ஸ்டஃபிங்குக்கு கொடுத்த பொருட்களை நன்கு கலந்து கொள்ளவும்.
மாவுடன் நெய், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து, 10 பாகமாக பிரிக்கவும்.
மாவு தொட்டுக் கொண்டு மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி லேசாக நெய் தடவி,பன்னீர் மசாலாவைத் தூவி, முக்கோணமாக மடிக்கவும்.
கல்லில் லேசாக எண்ணெய் தடவி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.


சாஸ், புதினா இனிப்பு சட்னி தொட்டு சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்