மாங்காய் பச்சடி

தேதி: January 6, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாங்காய் - 1 சிறியது,
காய்ந்த மிளகாய் - 1,
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
வெல்லம் - 1 சிறிய எலுமிச்சை அளவு,
புளி - 1சிறிய கோலி அளவு,
அரிசி மாவு - 2 தேக்கரண்டி,
உப்பு - 1 சிட்டிகை,
எண்ணெய் - 1 தேக்கரண்டி.


 

மாங்காயை தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும்.
1/2 டம்ளர் தண்ணீரில் புளியைக் கரைத்து அதில் மாங்காயை வேக விடவும்,
மாங்காய் வெந்ததும் வெல்லத்தை தூளாக்கி போட்டு கலந்து நன்கு மசிக்க வேண்டும்.
பிறகு உப்பு சேர்த்து கலக்கி, வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கொட்டவும்.
அரிசி மாவை 2 ஸ்பூன் தண்ணீரில் கரைத்து ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி அக்கா மாங்காய் பச்சடி அவித்து செய்தது செம டேஸ்ட்.ஆனால் நான் ஆசையில் 3 மாங்காயில் அளவுகளையும் மும்மடங்காக்கி செய்தேன்.இன்னும் வைத்திருக்கிறேன்.நிறைய சைவக்குறிப்புகள் தந்திருக்கிறீங்கள்.ரொம்ப நன்றி.

சுரேஜினி

அன்பு சுரேஜினி,
ஒன்றும் கவலைப்பட வேண்டாம். 2,3, நாட்களிலிருந்தாலும் ஒன்றும் கெடாது. எங்கம்மா முழு சைவம், அதனால எங்க வீட்டில சைவ உணவை வகை வகையா செய்வாங்க. அது கொஞ்சம் போல் எனக்கும் வந்திடுத்து.
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விஅக்கா உங்களுடைய குறிப்பில்
மாங்காய் பச்சடி மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

தயிர் சாதத்திற்கு தொட்டுக்க சூப்பரா இருக்கும். நன்றி துஷ்யந்தி.
அன்புடன்,
செல்வி

அன்புடன்,
செல்வி.