விளாம்பழ பச்சடி

தேதி: January 6, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

விளாம்பழம் - 1,
காய்ந்த மிளகாய் - 1,
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
வெல்லம் - 1 சிறிய எலுமிச்சை அளவு,
தயிர் - 1கப்,
உப்பு - 1 சிட்டிகை,
எண்ணெய் - 1 தேக்கரண்டி.


 

ஓட்டை உடைத்து உள்ளிருக்கும் பழத்தை எடுத்து, வெல்லத்தை தூளாக்கி போட்டு கலந்து நன்கு மசிக்க வேண்டும்.
பிறகு தயிர் விட்டு உப்பு சேர்த்து கலக்கி, வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கொட்டவும்.


மேலும் சில குறிப்புகள்