வெண்டைக்காய் புளி பச்சடி

தேதி: January 6, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்டைக்காய் - 10,
காய்ந்த மிளகாய் - 2,
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
வெல்லம் - 1 சிறிய எலுமிச்சை அளவு,
புளி - 1சிறிய கோலி அளவு,
அரிசி மாவு - 2 தேக்கரண்டி,
உப்பு - 1 சிட்டிகை,
தயிர் - 1 மேசைக்கரண்டி,
எண்ணெய் - 1 தேக்கரண்டி.


 

வெண்டைக்காயை 1/2 அங்குல துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும், 1/2 டம்ளர் தண்ணீரில் புளியைக் கரைத்து அதில் வேக விடவும்.
வெண்டைக்காய் வெந்ததும் வெல்லத்தை தூளாக்கி போட்டு கலக்க வேண்டும்.
பிறகு உப்பு சேர்த்து கலக்கி, அரிசி மாவை 2 ஸ்பூன் தண்ணீரில் கரைத்து ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கவும்.
ஆறியபின் தயிர் சேர்த்து கலக்கவும்.


மேலும் சில குறிப்புகள்