உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

வெண் பொங்கல்

 


தேவையானப் பொருட்கள்

  • பச்சரிசி -- 1 கப்
  • பாசி பருப்பு -- 1/2 கப்
  • மிளகு -- 1/2 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் -- 1/2 டீஸ்பூன்
  • சீரகம் -- 1/2 டீஸ்பூன்
  • சீரகத்தூள் -- 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் -- 3 சிட்டிகை
  • நெய் -- 3 ஸ்பூன்
  • முந்திரி -- 10 என்னம்
  • சிவப்பு மிளகாய் -- 3 என்னம்
  • கறிவேப்பிலை -- 2 இனுக்கு
  • கடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
  • உப்பு -- ருசிக்கேற்ப

செய்முறை

  • பச்சரிசி, பாசிபருப்பை கழுவி ஒரு கப்புக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், சீரகம், மிளகு, உப்பு சேர்த்து 1 டீஸ்பூன் நெய் ஊற்றி 15 நிமிடம் குக்கரில் ஸ்டீம் வந்தபின் வெயிட் போட்டு வைக்கவும்.
  • நன்றாக குழைந்தால் பொங்கல் நன்றாக இருக்கும். 15 நிமிடம் கழித்து அடுப்பை நிறித்தி ஸ்டீம் போனதும் குக்கரை திறக்கவும்.
  • பின் தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி முந்திரியை தாளித்து பொங்கலில் கொட்டவும்.
  • அதே கரண்டியில் நெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து மிளகாய் வத்தல், கறிவேப்பிலை போட்டவுடன் சீரகத்தூள்,மிளகுத்தூள் தாளித்து நன்றாக பொங்கலில் படும் அளவு நன்கு கிளறி விடவும்.
  • மீதியுள்ள நெய்யை ஊற்றி விடவும்.
  • வெண்பொங்கல் ரெடி.

வழங்கியவர்

Subha Jayaprakash -- Dubai

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

10 நிமிடங்கள் 55 நிமிடங்கள்
  random food image


comments