சர்க்கரை பொங்கல்

வழங்கியவர் : Subha Jayaprakash
தேதி : திங்கள், 07/01/2008 - 12:42
ஆயத்த நேரம் : 12 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 55 நிமிடங்கள்
பரிமாறும் அளவு :
- பச்சரிசி -- 1 கப்
- பாசி பருப்பு -- 1/4 கப்
- வெல்லம் -- 1 கப் (துருவியது)
- ஏலக்காய் -- 4 என்னம் (நசுக்கியது)
- பால் -- 1 கப் (காய்ச்சியது)
- நெய் -- 1/2 கப்
- முந்திரி -- 10 என்னம்
- உலர்ந்த திராட்சை -- 10என்னம்
- அடிகனமான பாத்திரத்தில் 1 டீஸ்பூன் நெய் விட்டு பாசி பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். உடன் பச்சரிசியை போட்டு ஒரு வதக்கு வதக்கி உடன் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- தண்ணீர் குறைந்து கொண்டே வரும் கொதிக்க வைத்த தண்ணீர் வைத்திருந்தால் குறைய குறைய் தண்ணீர் சேர்க்கலாம் அரிசி வேகும் வரை.
- வேறு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கையால் தண்ணீர் தெளித்து காய்ச்சவும். தூசிகள் இருந்தால் வந்து விடும். சூடு படுத்தினாலே போதும்.
- அரிசி வெந்த சமையத்தில் ஏலக்காய்,காய்ச்சிய பால், 1 ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
- நன்றாக குழைந்து வெந்து வரும். அப்போது நெய்யில் வருத்த முந்திரி, திராட்சை போட்டு கிளறி மீதியுள்ள நெய் ஊற்றி இறக்கவும் .
- சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி.
Note:
இது நம் வீட்டில் சமைப்பது. மண்பானை வைத்து சமைத்தால் முதலில் அரிசி, பாசிபருப்பை கழுவி உலை கொதிக்க வைத்து கொதித்த பின் தான் அரிசி,பாசிபருப்பை போடுவோம்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
45 நிமிடங்கள் 5 sec முன்பு
48 நிமிடங்கள் 21 sec முன்பு
ஒரு மணி நேரம் 52 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 56 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 1 min முன்பு
2 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு