இனிப்புக்கொழுக்கட்டை

தேதி: January 7, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - ஒரு கிலோ
வெல்லம் - 600 கிராம்
தேங்காய் - ஒன்று
பாசிப்பருப்பு - ஒரு ஆழாக்கு
உப்பு - ஒரு துளி


 

அரிசியை ஊறவைத்து வடிகட்டி ஈர அரிசி அரைக்கும் மிஷினில் அரைக்கவும்.
மாவை வறுத்து சலிக்கவும். பாசிப்பருப்பை வறுக்கவும். தேங்காயை பொடியாக பல்லு பல்லாக நறுக்கவும்.
வெல்லத்தை தட்டி பாகு காய்ச்சி மாவில் ஊற்றி, தேங்காய், பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து கிளறி கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லிசட்டியின் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அம்மா,

உங்களின் இனிப்பு கொழுக்கட்டை செய்து பார்க்க விருப்பம்.அம்மா,அரிசி அரைக்கும் மிஷின் இங்கு கிடையாததால்,ரெடிமேட் வறுத்த பச்சரிசி மாவில் தான் முயற்சி செய்ய வேண்டும்.
வறுத்த பச்சரிசி மாவு என்றால் எத்தனை ஆழாக்கு அல்லது எவ்வளவு கிராம்/கிலோ உபயோகிக்க வேண்டும்.
வெல்லம் பாகு காய்ச்சுவது என்றால் என்ன.வேகாத பாசிப்பருப்பை தானே மாவுடன் கிளறி கொழுக்கட்டை பிடிக்க வேண்டும்.இட்லிக் கொப்பரையில் வேக எவ்வளவு நேரம் பிடிக்கும்.இந்த ரெஸிபி இதுவரை செய்ததில்லை.உங்கள் பதில் கண்டதும் செய்ய விரும்புகிறேன்.நன்றி.

மாவு 500கி [21/2ஆழாக்கு] அளவு எடுக்கவும். மத்ததெல்லாம் மேலே கொடுத்திருக்குமல் அளவில் பாதி அளவு போடவும்.
வெல்லத்தை தூளாக்கி சிறிது தண்ணீர் தெளித்து அடுப்பில் காய்ச்சும்போது கரண்டியில் பாகை தூக்கி பிடிக்கும்போது ஒரு கம்பி போல் வரும்போது இறக்கி மாவில் ஊற்ற நான் -ஸ்டிக் மரக்கரண்டிய்யால் கிளறவும். அதற்கும் முன் தேங்காயை மிகப் பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும். பாசிப்பருப்பை நன்கு வறுத்து பாகு ஊற்றும்முன் மாவில் போட்டு கிளறவும். துளி உப்பு சேர்க்கலாம். கையில் பிடித்து வேகவைக்கும் போது ஒரு கத்தியால் குத்தி பார்த்தால் மாவாய் இருந்தால் ஒட்டி வரும். ஒட்டாமல் வந்தால் வெந்திருக்கும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

அம்மா,

நலமா.எனக்கு பாகு சரியாக வரமாட்டேங்கறது.நீங்கள் எனக்கு எடுக்க சொல்லியுள்ள 300 கி வெல்லத்திற்கு, 1/2 ஆழாக்கு நீர் சேர்த்து பாகு காய்ச்சலாமா. இரண்டொரு நாளில் திரும்ப செய்ய விரும்புகிறேன்,உங்கள் பதில் கண்டதும்.நன்றி.

வெல்லத்தில் மூழ்க சிறிது தண்ணீர் தெளித்து பாகு காய்ச்சவும். பாகு பக்கத்தில் இருந்து ஒரு கரண்டி போட்டு காய்ச்சும்போது ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்து கையை நனைய விட்டு கரண்டியால் பாகை எடுத்து கட்டை விரல், ஆள்காட்டி விரல் இரண்டால் தொட்டால் கம்பி பதம் வரவேண்டும். வந்தவுடன் பாகை இறக்கி ஊற்றி கிளறவும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

அம்மா,

நலமா.உங்கள் தெளிவான பதிலுக்கு மிகவும் நன்றி.நேற்று உங்கள் இனிப்புக் கொழுக்கட்டை செய்தேன்.மிக மிக சுவையாக இருந்தது.டேஸ்ட் எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.வெல்லப் பாகு நீங்கள் சொல்லி இருந்தபடியே செய்தேன்,நன்றாக வந்தது.மிகவும் நன்றி உங்களுக்கு.

இனிப்புக்கொழுக்கட்டை செய்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி. பரவாயில்லை இந்த சின்ன வயதில் இவ்வளவு ஆர்வமாக செய்வது நினைத்தாள் சந்தோசமாக இருக்கிறது. இப்போதுதான் ஆர்வமாக செய்தாலும் சாப்பிடமுடியும். செய்வதற்கும் சுறுசுறுப்பாக இருக்கும். பாராட்டுக்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

இனிப்புக்கொழுக்கட்டை செய்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி. பரவாயில்லை இந்த சின்ன வயதில் இவ்வளவு ஆர்வமாக செய்வது நினைத்தாள் சந்தோசமாக இருக்கிறது. இப்போதுதான் ஆர்வமாக செய்தாலும் சாப்பிடமுடியும். செய்வதற்கும் சுறுசுறுப்பாக இருக்கும். பாராட்டுக்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

நன்றி அம்மா.என் கணவர் காலையில் ஆபிஸுக்கு சென்றால் அவர் திரும்பும் வரை எனக்கு முழுக்க தனிமை தான்.அருகில் இந்திய குடும்பங்கள் இல்லை.என்னை நான் பிஸியாக்கிக் கொள்ளவும்,சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் இதுபோன்று புதிதாக ஏதாவது ட்ரை செய்து கொண்டிருப்பேன்.மனதிற்கும் சந்தோஷமாக உற்சாகமாக இருக்கும்.இதுபோன்று என்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லையென்றால் எதையாவது நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பேன்.

ஸ்கூல்,காலேஜ் படிக்கும் போதும் சரி, வேலை பார்க்கும் போதும் சரி ஹாஸ்டல் தான்.மாமியார் வீட்டில் சமையலுக்கு ஆள் இருந்தார்கள்.அதனால் சமையலில் அனுபவம் இல்லை.இப்போது தான் அறுசுவையின் மூலமாக கற்றுக் கொண்டு இருக்கிறேன்.தளத்தை நிர்வகிக்கும் பாபு அண்ணணுக்கும்,அறுசுவையில் குறிப்புகள் கொடுத்து வரும் உங்களைப் போன்ற சமையல் வல்லுநர்களுக்கும் நன்றி.

சொல்வது அனைத்தும் உண்மைதான். இப்படி செய்து பார்த்தால் சமையல் செய்வது ஈஸியானதாகவும், மிகச்சிறந்த வல்லுநர்களாகவும் ஆகலாம். கீப்ட் இட் அப் அனுபா.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை