உப்புக்கொழுக்கட்டை

தேதி: January 7, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 4 ஆழாக்கு
பாசிப்பருப்பு - ஒரு ஆழாக்கு
தேங்காய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு


 

பச்சரிசியை ஊற வைத்து வடிகட்டி மிஷினில் அரைத்து வறுத்து சலிக்கவும். பாசிப்பருப்பை வறுத்து மாவில் கொட்டவும்.
வெந்நீரை கொதிக்க வைத்து மாவில் உப்பு சேர்த்து ஊற்றி கரண்டியால் சூடாக கிளறவும்.
பின் கையால் பிசைந்து கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்