புழுங்கலரிசி உப்புக்கொழுக்கட்டை

தேதி: January 7, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கலரிசி - 2 ஆழாக்கு
தேங்காய் - ஒரு மூடி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வர மிளகாய் - 4
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

புழுங்கலரிசியை ஊற வைத்து கிரைண்டரில் உப்பு சேர்த்து ஓரளவு கெட்டியாக அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு பொரிய விட்டு வரமிளகாயை கிள்ளி போட்டு கறிவேப்பிலையை உருவிப்போட்டு, தேங்காயை துருவிப்போட்டு வதக்கி, மாவை கொட்டி கட்டிபடாமல் கிளறவும்.
மாவு கையில் ஒட்டாத அளவு வெந்தவுடன் இறக்கி கொழுக்கட்டையாக பிடித்து இட்லி சட்டியில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்