தேதி: January 7, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
புழுங்கலரிசி - 4 ஆழாக்கு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
அரிசியை ஊறவைத்து கெட்டியாக நைசாக அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மாவை கொட்டி கையில் ஒட்டாத அளவு கிளறி இறக்கவும். இடியாப்பக்கட்டையில் பிழிந்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பச்சரிசி மாவில் செய்யும் இடியாப்பம் சாப்பிட்டால் சுகர் கூடும். இந்த இடியாப்பம் சாப்பிடலாம்.