சேப்பங்கிழங்கு புளி குழம்பு

தேதி: January 7, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

சேப்பங்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
புளி - ஒரு லெமென் சைஸ்
தாளிக்க:
நல்லெண்ணெய் - மூன்று தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு - கால் தேகரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
பூண்டு - ஐந்து பல்
கறிவேப்பிலை - ஒரு கைப் பிடி
சேர்க்க வேண்டிய பொடி வகைகள்:
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
வெந்தய பொடி - கால் தேக்கரண்டி
உப்பு தூள் - தேவைக்கு
தேங்காய் - மூன்று பத்தை


 

சேப்பங்கிழங்கை மண்ணில்லாமல் கழுவி குக்கரில் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து வேக வைத்து தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.
தாளிக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் தாளித்து பூண்டை பொடியாக நறுக்கி போடவும். வெங்காயம் முதலில் வதக்கி விட்டு பிறகு பொடியாக தக்காளியை நறுக்கி சேர்த்து வதக்கவும், வதக்கி எல்லா தூள் வகைகளையும் சேர்த்து ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து விடவும்.
பச்ச வாசனை போனதும் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் தேங்காயை அரைத்து பால் எடுத்து ஊற்றி வெந்த சேப்பங்கிழங்கையும் சேர்த்து இறக்கவும்.
சுவையான சூப்பரான புளி குழம்பு ரெடி.


சேப்பங்கிழங்கு ரொம்ப கேஸ் ஆகையால் அதில் பூண்டு, சோம்பு சேர்த்தால் ஒன்றும் ஆகாது.

மேலும் சில குறிப்புகள்