தேவையானப் பொருட்கள்
- கமலா ஆரஞ்சு தோல் - 2 பழத்தினுடையது,
- மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,
- புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு,
- கடுகு - 1/2 டீஸ்பூன்,
- பெருங்காயம் - சிறிது,
- கறிவேப்பிலை - 10,
- வெல்லம் - 1 சிறிய எலுமிச்சை அளவு,
- அரிசி மாவு - 2 தேக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - 4 மேசைக்கரண்டி.
|
செய்முறை
- ஆரஞ்சு தோலை சுத்தம் செய்து, மிகவும் பொடியாக (பாக்கு போல) நறுக்கவும்.
- 1 டம்ளர் தண்ணீரில் புளியைக் கரைத்து வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய தோலை சேர்த்து நன்கு வதக்கவும். தோல் அதிலேயே பாதி வெந்து விடும்.
- பிறுகு கரைத்த புளி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- புளி கொதித்து திக்காக வந்ததும் வெல்லத்தை தூளாக்கி போட்டு கலந்து விடவும்.
- அரிசி மாவை 2 ஸ்பூன் தண்ணீரில் கரைத்து ஊற்றி எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை விட்டு இறக்கவும்.
|
குறிப்பு:
சாதத்தில் கலந்து சாப்பிட சுவை அள்ளும். தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் வேறு சாதமே வேணடாம்னு தோணும். கர்ப்பிணி பெண்களுக்கு வாய்க்கும் நன்றாக இருக்கும். மசக்கை வாந்தியை கட்டுப் படுத்தும். வாரக்கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.
வழங்கியவர்
இ. செந்தமிழ்செல்வி, பாண்டிச்சேரி.
சமைக்கும் நேரம்
|
|
15 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
3 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -