தேவையானப் பொருட்கள்
- கோழிக்கறி - 1/2 கிலோ,
- குடமிளகாய் - 4 (நடுத்தர அளவு),
- பெரிய வெங்காயம் - 4,
- இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
- மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி,
- கார்ன்ஃபிளார் மாவு - 2 மேசைக்கரண்டி,
- சோயா சாஸ் - 1/2 தேக்கரண்டி,
- எலுமிச்சம் பழ சாறு - 2 தேக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.
|
செய்முறை
- கோழியை சுமாரான துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும்.
- வெங்காயத்தையும், குடமிளகாயையும் அரை அங்குல துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் சிக்கன், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சோயா சாஸ், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்து அடுப்பில் வைக்கவும்.
- சிக்கன் நன்கு வேகும் வரை இருக்க வேண்டும். தேவைப்பட்டால், ஒரு கை தண்ணீர் தெளிக்கலாம்.
- வெந்ததும் இறக்கி வைத்து விட்டு, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தையும், குடமிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம், குடமிளகாய் நன்கு வதங்கியதும் வேக வைத்த சிக்கனை கொட்டி கிளறவும்.
- கார்ன்ஃபிளார் மாவைத் தூவி நன்கு கிளறி இறக்கவும்.
|
குறிப்பு:
சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு. |
30 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
12 நிமிடங்கள் 41 நொடிகள் முன்பு -
27 நிமிடங்கள் 39 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 56 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு -