சௌசௌ கூட்டு

தேதி: January 7, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சௌசௌ -- 1 என்னம் (தோலை சீவி பொடியாக நறுக்கவும்)
பாசி பருப்பு -- 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் -- 10 என்னம் (வட்டமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 3 என்னம் (நீளமாக நருக்கியது)
உப்பு -- ருசிக்கேற்ப
சாம்பார் தூள் -- 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
மிளகாய் வத்தல் -- 2 என்னம்


 

பாசிப்பருப்பை கழுவி சௌசௌ உடன் சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
ஓரளவு வெந்ததும் பச்சைமிளகாய்,வெங்காயம், உப்பு , சாம்பார் பொடி சேர்த்து ஒரு கிளறு கிளறி வேகவைக்கவும்.
பின் தாளிக்க எண்ணையில் கடுகு,உளுந்து போட்டு வத்தல்,கறிவேப்பிலை போட்டு தாளித்து வெந்து கொண்டிருக்கும் கறியில் கொட்டி கிளறி இறக்கி பறிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சௌசௌ கூட்டு செய்வதற்கு எளிமையாகவும் சுவையாகவும் இருந்தது நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்