சின்ன வெங்காய சட்னி

தேதி: January 8, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சின்ன வெங்காயம் -- 20 என்னம்
சிவப்பு வத்தல் -- 8 என்னம்
தக்காளி -- 2 என்னம்
உப்பு -- ருசிக்கேற்ப
தாளிக்க :
கடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
நல்லெண்ணைய் -- 1 1/2 ஸ்பூன்


 

வெங்காயம்,தக்காளி,மிளகாய் எல்லாம் சேர்த்து நைசாக இல்லாமல் அதற்கு முந்தய பக்குவத்தில் அரைத்தெடுக்கவும்.
பின் எண்ணைய் 2 ஸ்பூன் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த கலவையை கொட்டி உப்பு சேர்த்து கலக்கவும்.
பின் கொதித்ததும் நல்லெண்ணைய் ஊற்றி 4 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கி பறிமாறவும்.
சின்ன வெங்காய சட்னி ரெடி.


மேலும் சில குறிப்புகள்