தக்காளி குழம்பு

தேதி: January 8, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

சிறிய வெங்காயம் -- 15 என்னம்
தக்காளி -- 3 என்னம்
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
சீரகம் -- 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி -- 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் -- 1/2 கப்
தனியா தூள் -- 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை -- 1/4 கப் (பொடிதாக நறுக்கியது)

தாளிக்க:

எண்ணைய் -- 1/4 கப்
கடுகு -- சிறிதளவு
உளுத்தம்பருப்பு -- சிறிதளவு
சிறிய வெங்காயம் -- 10 என்னம் (வட்டமாக நறுக்கியது)
கறிவேப்பிலை -- 1 இனுக்கு


 

வாணலியில் எண்ணைய் கொஞ்சம் ஊற்றி சிறிய வெங்காயம் , போட்டு சிறிது வெந்தபின் தக்காளி போட்டு சீரகம்,கறிவேப்பிலை,தனியா தூள் போட்டு வதக்கவும்.
பின் சாம்பார் பொடி போட்டு கொஞ்சம் எண்ணைய் ஊற்றி 1 நிமிடம் வதக்கவும்.
இதனுடன் தேங்காய் துருவலையும் சேர்க்கவும்.
இதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
மீதியுள்ள எண்ணையை வாணலியில் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து சிறியவெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
பின் அரைத்த மசாலாவை வாணலியில் ஊற்றவும்.பின் இதனுடன் உப்பு சேர்க்கவும். 5 நிமிடம் வேகவைக்கவும்
கொத்தமல்லி தழை தூவி இறக்கி பறிமாறலாம்.
தக்காளி குழம்பு ரெடி.


மேலும் சில குறிப்புகள்