மட்டன் சமோசா

தேதி: January 8, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மைதா மாவு -- 350 கிராம்
பேக்கிங் பவுடர் -- 1 1/2 டீஸ்பூன்
நெய் -- 2 டேபிள்ஸ்பூன்
தயிர் -- 1 டீஸ்பூன்
கொத்துக்கறி -- 250 கிராம்
பெரிய வெங்காயம் -- 1 கப் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை -- 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
புதினா இலை -- 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி -- 1 அங்குலம் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 4 என்னம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி -- 1 என்னம்
கரம் மசாலா -- 1 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
எண்ணைய் -- பொரிக்க


 

மைதாமாவுடன் பேக்கிங் பவுடரை கலந்து சலித்து உப்பு, நெய், தயிர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
கொத்துக்கறியை வாணலியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வதக்கிக் கொள்ளவும்.
தக்காளியை 1/2 கப் தண்ணீரில் வேகவைத்து தோலை நீக்கி கையால் பிசைந்து அதனுடன் கரம்மசாலா, 1 டீஸ்பூன் கொத்தமல்லி தழை, 1 டீஸ்பூன் புதினா இலை சேர்த்து தனியே வைக்கவும்.
கொத்துக்கறியுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, தேவையான உப்பு, மீதியுள்ள கொத்தமல்லி தழை, புதினா இலை, தக்காளி கலவை சேர்த்து பிசைந்து வைக்கவும்.
1/2 மணிக்குப் பிறகு பிசைந்த மாவை மீண்டும் நன்கு பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வட்டமாக தேய்த்து அதை அப்படியே பாதியாக மடித்து மேலே தேய்த்து அதை கோன் வடிவமாக செய்து கொத்துக்கறி கலவையை வைத்து மூடி 1/2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
வாணாலியில் காயவைத்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான பஞ்சாபி முறையில் செய்த மட்டன் சமோசா ரெடி.


மேலும் சில குறிப்புகள்