நெத்திலி கருவாடு ப்ரை

தேதி: January 8, 2008

பரிமாறும் அளவு: 4 person

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

நெத்திலி கருவாடு - கால் கிலோ
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு தூள் - கால் தேக்கரண்டி
சீரக தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு


 

நெத்திலி கருவாடில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மசாலாக்களையும் போட்டு பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
பிறகு ஒரு ஆழமான இரும்பு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு ஊற வைத்த கருவாடுகளை போட்டு நன்கு எண்ணெய் ஊற்றி வறுத்தெடுக்கவும்.


ஆ கருவாடா, ம்ம் ஒரு வெட்டு வெட்டுங்கள், ப்ளெயின் சாதம், ப்ளெயின் தாலுக்கு நல்ல சூட்டாகும்
கருவாடு கழுவும் விதம் -- நெத்திலி கருவாடு ரொம்ப மண்ணாக இருக்கும், ஆகையால் வெந்நீரில் போட்டு ஊறவைக்கவும். பிறகு ஒரு பெரிய கண் வடிகட்டியில் போட்டு சிங்க் டேப்புக்கு நேராக வைத்து அரிசி களைவது போல் களைந்து களைந்து கழுவ வேண்டும். கழுவி தண்ணீரை வடித்து மசாலாக்களை போட்டு வறுக்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் ஜலீலா அக்கா,
இன்று உங்கள் நெத்திலிக் கருவாடு பிரை செய்தேன்.மிகவும் அருமை.இருவரும் விரும்பி சாப்பிட்டோம்.அதுவும் உங்கள் சாம்பாருக்கு சூப்பரோ சூப்பர் மேட்ச்சாக இருந்தது.சீக்கிரம் 4 சதங்கள் அடிங்கள் அக்கா.இந்த ரெஸிபியை கற்றுக் கொள்ள உதவிய உங்களுக்கு மிக்க நன்றி.

நிருபமா

அருமை தங்கை நிருப்பமா
கருவாடு சாம்பார் செய்து பார்த்ததற்கு மிக்க நன்றி,
ஆ என் வாயை வேறு கிளறி விட்டு விட்டீர்கள், எனக்கும் கருவாடு சாப்பிடனும் போல் உள்ளது.

உங்களுக்காக கிராம் அளவு யார் எல்லாம் கொடுத்துள்ளார்கள்.என்று பார்த்துண்டு இருக்கிறேன்.
ஜுபைதா குறிப்புகளை பாருங்கள்.
ஜலீலா

Jaleelakamal