இஞ்சி சாறு (சளி இருமலுக்கு)

தேதி: January 8, 2008

பரிமாறும் அளவு: நான்கு நபருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

இஞ்சி - ஐம்பது கிராம்
தேன் (அ) சர்க்கரை - தேவைக்கு
உப்பு - ஒரு பின்ச்


 

இஞ்சியை நல்ல கழுவி தோலெடுத்து பொடியாக நறுக்கி மிக்ஸியில் திரிக்கவும் .
பிறகு கொஞ்சமாக அரைப்படுகிற அளவுக்கு ஆறிய வெந்நீர் ஊற்றி அரைத்து தேங்காய் பால் எடுப்பது போல் டீ வடிகட்டியில் பிழிந்து அந்த சக்கையை தூர போட வேண்டாம்.
ப்ரிட்ஜில் வைத்து மூன்று நாளைக்கு இஞ்சி டீ போட பயன்படுத்தலாம்.
வடிகட்டிய இஞ்சி சாறை ஒரு எவர் சில்வர் டம்ளரில் ஐந்து நிமிடம் ஊற்றி வைக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து பார்த்தால் அடியில் நஞ்சு தங்கி இருக்கும் மேலோடு உள்ள சாறை மட்டும் எடுத்து அதில் தேவைக்கு தேன் (அ) சர்க்கரை சேர்த்து ஒரு பின்ச் உப்பு போட்டு குடிக்கவும். குடிக்கும் போது ஒரே சிப்பில் முழுங்கக்கூடாது, மிட்டாய் சப்புவது போல் கொஞ்ச கொஞ்சமாக சாப்பிடனும்.
குழந்தைகளுக்கு பொரை ஏறாமல் பார்த்து கொடுக்கனும்.
மூன்று நாளைக்கு தொடர்ச்சியாக இரண்டு வேளை குடிக்கலாம்.
காரம் அதிகமாக இருந்தால் வயிறு கலக்கும்.


குளிர் காலத்தில் அடிகடி சளி பிடிக்கும் அதற்கு வாய் கசப்பிற்கு, வாந்திக்கு இந்த இஞ்சி சாறு அரு மருந்தாகும்.
சாதரணமாக அடிக்கடி சளி பிடிக்கும் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை கொடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலீலாக்கா நான் கூட இது ரொம்ம்ப எரியும்னு நெனச்சேன் பாத்தா எரியலயே...அப்ரம் நீங்க சொன்னீங்களே இஞ்சி சாறு எடுத்துட்டு அப்டியே வெச்சா கீழ நஞ்சு வரும்னு...வெள்ள கலர்ல கீழ மாவு மாதிரி எழுதுவோ இருந்தது அதுவா?
ஆனால் படாத பாடு பட்டுட்டேன் என் பொன்னு குடிப்பாளொ என்னவோன்னு 1/2 ஸ்பூன் கொடுத்தேன் அப்ரம் பாத்தா அடம் புடிச்சு அழுது புரண்டு 5 ஸ்பூன் குடிச்சிருக்கா..அவ வயிறு கொஞ்சம் ஸ்ட்ராங் தான் இருந்தாலும் பயமா தான் இருக்கு..நாளைக்கு வயிறு கலக்கினா குடிக்கிர குறிப்பையும் சேத்துடுங்க:-)

ஜலீலா அக்கா இஞ்சி அரைக்காமே அப்படியே துருவி சாறு எடுத்து குடுத்தேன் அக்கா, அவளும் குடுச்சுட்டா :-) இப்போ இருமலும் பரவால்லை..
அக்கா எனக்கு ஒரு சந்தேகம் இஞ்சி சாறு கொஞ்சம் நேரம் வைத்து வடிகட்டி தான் கொடுக்கனுமா இல்லை அப்பவே குடுக்கலாமா

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

டியர் ஹாஷினி இஞ்சி சாறு சிறிது நேரம் வைத்து வடிக்கட்டி தான் குடிக்கனும்/
துருவி என்றால் அப்படியே சக்கையா பிழிந்து சிறிது நேரம் கழித்து வேறு ஒரு டம்ளரில் ஊற்றுங்கள். இப்போது அடியில் மஞ்சளாக உரைந்து நிற்கும் அத்துடன் கூடிக்க கூடாது.
அதற்கு தான் சிறிது நேரம் டம்ளரிலேயே வைத்து இருக்கனும் என்றேன்.

ஜலீலா

Jaleelakamal