உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

சிக்கன் ரைஸ்


சிக்கன் ரைஸ் மிகவும் சுவையாக இருக்கும்.செய்வதும் சுலபம்.

தேவையான பொருட்கள்

  • கோழி - 1 கி
  • கோழி சூப் கட்டி - 2 (maggi chicken cubes)
  • அரிசி - 1/2 படி
  • இஞ்சி பூண்டு விழுது - தே.அளவு
  • உப்பு - தே.அளவு

செய்முறை

  • கோழியை சுத்தம் செய்து அதனுடன் 1 1/4 படி தண்ணீர் ஊற்றவும்.
  • அதில் இஞ்சி பூண்டு விழுது,சிக்கன் க்யூப்,உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  • கோழி ஓரளவு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  • கோழியை தண்ணீரிலிருந்து எடுத்து விடவும்.
  • அந்த நீரை ஆற விடவும்.
  • அரிசியை கலைந்து அதில் கோழி தண்ணீர் 1 படி அளவு எடுத்து ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து ரைஸ் குக்கரில் அரிசியை வேக விடவும்.
  • இப்போது சுவையான சிக்கன் ரைஸ் ரெடி.
  • வேக வைத்த கோழியை குருமாவும் செய்யலாம்,தேவையான மசாலாக்கள் போட்டு சிக்கன் ஃபிரையும் செய்யலாம்,குழம்பும் செய்யலாம்.

குறிப்பு:

அவரவர் பயன் படுத்தும் அரிசிக்கு தகுந்தார் போல் தண்ணீரின் அளவை மாற்றிக் கொள்ளவும்.சிக்கன் க்யூப் போடுவதால் உப்பின் அளவையும் கவனித்து போடவும்.

வழங்கியவர்

rasia_nisrina

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 நபர்கள் 30 நிமிடங்கள் 20 நிமிடங்கள்
  random food image


comments