யம்மி பனானா (6+ குழந்தைகளுக்கு)

தேதி: January 9, 2008

பரிமாறும் அளவு: 1குழந்தைக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நல்ல பழுத்த சிறுபழம் - ஒன்று
கொதிக்க வைத்து ஆறிய பால் - கால் கப்


 

பழத்தையும் பாலையும் ஒரு பரந்த பாத்திரத்தில் போட்டு மேஷர் கொண்டு நன்கு மசித்து பேஸ்ட் போலாக்கி உடனுக்குடன் குழந்தைக்கு ஊட்டவும். அல்லது ஃபோர்க்கால் உடைத்தாலும் போதும்.
பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு இது. முதல் முறை கொடுக்கும்பொழுது 1/2 கப் பால் சேர்த்து மேஷ் செய்யவும் அப்பொழுது இன்னும் நீர்த்து இருக்கும்.


சிக்விடா, பூவன் பழம், சிறு பழம், நேந்தரம் பழம் எல்லாம் கொடுக்கலாம் கொஞ்சம் பழகியவுடன் ஆனால் தொடங்கும்பொழுது சிறு பழத்தால் மட்டும் செய்யவும். கான்ஸ்டிபேஷன் பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு நம்மூரில் பழத்தை ஊட்டுவார்கள். ஆனால் பழம், ஆப்பிள் போன்றவை பிரச்சனையை இன்னும் அதிகரிக்கும். அது போன்ற குழந்தைகளுக்கு பியர்ஸ், பப்பாளி என கொடுக்கலாம்

மேலும் சில குறிப்புகள்