பேபி வெனிலா புட்டிங் (6+ மாத குழந்தைகளுக்கு)

தேதி: January 9, 2008

பரிமாறும் அளவு: 1 குழந்தைக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பசும் பால் - ஒரு கப்
வறுத்த அரிசி மாவு - 2 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - ஒரு சொட்டு
வெல்லம் - அரை தேக்கரண்டி


 

அரிசி மாவில் 2 தேக்கரண்டி பால் விட்டு கரைத்து வைக்கவும். மீதமுள்ள பாலை கொதிக்க வைக்கவும்.
கொதிக்கும்பொழுது கரைத்து வைத்த அரிசி மாவையும், வெல்லப் பொடியையும் தூவி குறைந்த தீயில் கிளறிக் கொண்டே 5 நிமிடம் கொதிக்க விடவும்.
அப்பொழுது தான் அரிசி மாவு வேகும். தீயை அணைத்து விட்டு ஆறியதும் ஒரு சொட்டு எசன்ஸ் விட்டு ஸ்பூனால் குழந்தைக்கு ஊட்டலாம்.


சிறு குழந்தைகளுக்கு ஜாரில் வரும் உணவுகள் பிடிக்கும். அதனால் அது வாங்கி அதில் உள்ள இன்க்ரீடியன்ட்ஸ் படி வீட்டில் செய்து பார்ப்பேன். அதே போல் சுவையாக குழந்தைகள் விரும்பும் விதம் வரும். இது ஒருமுறை அப்படி செய்து பார்த்தது தான். என் குழந்தைக்கு 6 மாதம் இருக்கும்பொழுது கொடுத்தேன். விரும்பி சாப்பிடுவாள். வெனிலா எசன்ஸ் சேர்க்க விருப்பமில்லாவிட்டால் விட்டு விடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

தளிகா என் 6 மாதம் முடிவடைந்த குழந்தைக்கு பிரஷ் மில்க் கலந்து இது செய்து கொடுக்கலமா. முடிந்தால் உடனே பதில் சொல்லவும்.
regards
siljavignesh

ஹாய் சில்ஜா...உங்கள் குழந்தைக்கு முன்னமே அதாவது 1 மாதத்திற்கு முன்பே சாலிட் உணவு கொடுக்க தொடங்கியிருந்தால் கொடுக்கலாம்..என் மகளுக்கு ஒரு 6/7 மாதம் இருக்கப்ப தான் கொடுத்தேன்..முதல் 8 மாதத்திற்கு அவங்களுக்கு ருசி ஒரு ப்ரச்சனியாக இருக்காது...அப்ப நல்ல சாப்பிடுவாங்க...அப்ப முதல் உணவு அரிசி கூழ்,ராகி கூழ்,செரெலேக் அப்படி கொடுத்து பழக்கலாம்...பின் 8 மாதம் ஆகரப்ப அடம் பிடிக்க துடங்குவாங்க..அப்ப வழக்கமான உணவு கொடுத்தா சாப்பிட மாட்டாங்க அப்பொழுது இப்படியெல்லாம் விதவிதமா செஞ்சு கொடுத்தா சப்பிடுவாங்க..அதுவரை ஓட்ஸ்,ரைஸ்,ராகி,சத்து மாவு பழங்கள் காய்கறிகள்னு கொடுக்கலாம்..

தளிக்கா மன்னிக்கவும்.
சில்ஜா நீங்க டின் பவுடர் எது உங்க குழந்தைக்கு கொடுக்கிறீகளோ அதில் இதை செய்து கொடுங்கள்.வென்னிலா எஸன்ஸ் ஒரு டிராப் தான் சேர்க்கனும்.இல்லை என்றால் திகட்டும்.

ஜலீலா

Jaleelakamal

சலாம் ஜலீலாக்கா

தாய்மார்களே தங்கச்சிமார்களே,அக்காமார்களே நாம் பொதுவாக செய்யும் ஒரு தவறு ஒன்று உள்ளது

1 வயது வரை பசும்பால் கொடுக்கக் கூடாது..குழந்தைஇக்கென்றே செய்யப்பட்ட ஃபார்முலா தான் கொடுப்போம்..
ஃபார்முலாவை ஒரு போதும் கொதிக்க வைக்காதீர்கள்.அது டின்னிலேயே எழுதியிருக்கும்..
திட உணவு தன்னீரில் தயாரித்து பின் ஃபார்முலாவை கலக்குவது தவறில்லை..ஆனால் ஃபார்முலாவையே சேர்த்து கொதிக்க வைக்கக் கூடாது.
தாராளமாக திட உணவுக்கு (மட்டும்)பசும்பால் பயன்படுத்தலாம்.

யாஹுவுக்கு வாங்க அது என்ன தமாஷ்னு தெரியாம மண்டை வெடிக்குது ஜலீலாக்கா

கொஞ்சம் நேரம் மண்டையை குடையுங்கோ
கொஞ்சம் பிஸி
அப்ப்டியே வந்தாலும் நான் பதில் எழுதுவதற்குள் உங்களுகு வெருத்து விடும்.
ஹே ஹே ஹே
ஜலீலா

Jaleelakamal

அட்மினண்ணா ஸ்மைலீ வசதி இருந்தா நல்லா இருக்கும்....இந்த ஊர்ருன்னு முறைக்கிர மாதிரி,விழிந்து விழுந்து சிரிக்கிர மாதிரி,கோவம்,புன்சிரிப்பு,அழுகை போதும்

ஜலீலாக்கா எல்லாம் உங்களுக்கு அனுப்ப தான்

தளிகா அக்கா
புட்டு,இடியாப்பத்திற்க்கு உபயோகிக்கும் மாவை வைத்தும் செய்யலாம் இல்லையா? we r using whole milk inour home. can i use tht for preparing this?

தளிகா அக்கா,பதில் சொல்ல மாட்டீங்களா?

ஹாய் விஜி கட்டாயம் பதில் வரும் ..புட்டு மாவு பயன்படுத்தலாம்.காரன் ஃப்லாரால் கூட செய்யலாம்.பசும்பால் பழகாததால் இன்று 2 ஸ்பூன் மட்டும் கொடுங்க...புடிசிருந்தா பவுல் பவுலா ஊட்டலாம்

தளிகா எது கேட்டாலும் ரொம்ப தெளிவாக பதில் சொல்வீங்க. எனக்கு இது தான் உங்களை ரொம்ப பிடிக்கும். உங மீன் மசாலா நேற்று நான் செய்தேன். ரொம்ப டேஸ்ட் தான்.
regards
siljavignesh