கிடாரங்காய் ஊறுகாய்

image

வழங்கியவர் : Jaleela Banu

தேதி : புதன், 09/01/2008 - 14:36

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • கிடாரங்காய் - பத்து (உப்பில் ஊறியது)
  • நல்லெண்ணெய் - ஐந்து மேசைக்கரண்டி
  • கடுகு - ஒரு தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் - ஐந்து
  • கறிவேப்பிலை - அரை கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
  • பூண்டு - 2 மேசைக்கரண்டி (பொடியாக அரிந்தது)
  • இஞ்சி - ஒரு மேசைக்கரண்டி (பொடியாக அரிந்தது)
  • தக்காளி - மூன்று (பொடியாக அரிந்தது)
  • சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • வெந்தயப்பொடி - அரை தேக்கரண்டி
  • புளி - ஒரு கொட்டைபாக்கு அளவு
  • வெல்லம் - ஒரு சிறிய துண்டு

 

  • கிடாரங்காயை உப்பில் ஊறியதை பொடியாக நறுக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை தாளித்து அரிந்த பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி தக்காளியை சேர்க்கவும்.
  • மிளகாய்தூள், மஞ்சள் துள், சீரகத்தூள், வெந்தயப் பொடி, ஒரு பிட்டு வெல்லம் சேர்த்து மீண்டும் வதக்கி புளியை கரைத்து ஊற்றி கிடாரங்காயையும் வதக்கி சிம்மில் பத்து நிமிடம் வைத்து இறக்கவும்.

Note:

இது ஒரு தஞ்சாவூர் ஸ்டைல் ஊறுகாய் செய்து பாருங்கள்.







முதல் முறை இப்படி ஒரு காய் கேக்கறேன் ..ஒரு வேளை பேர் எனக்கு புரியலையா இருக்கும்...நெல்லிக்காஇ,கலாக்காய் செம்மீன் புளி போல் இது எப்படி இருக்கும்

தளிகா

தளிகா!...கடாரங்காயைத்தான் ஜலீலா குறிப்பிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆம் ஐ கரைக்ட்?

யெஸ் மாலதி யு ஆர் காரெக்ட்
ஜலீலா

Jaleela