பாகற்காய் ஜூஸ்(சர்க்கரை வியாதிக்கு)

தேதி: January 9, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பெரிய பாகற்காய் - ஒன்று
தண்ணீர் - 1 1/2 டம்ளர்
உப்பு - தேவையான அளவு


 

ஒரு பாகற்காய் எடுத்து அதில் உள்ள விதைகளை நீக்கி விட்டு வெந்நீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு அதை நன்கு பிழிந்து எடுத்து மிக்ஸியில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து ஹய் ஸ்பீடில் ஓட விட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விடவும்.
பத்து நிமிடம் கழித்து பார்த்தால் மேலே தண்ணீர் தெளிந்து நிற்கும். அதை மேலோடு வடித்து மூக்கை தம் பிடித்து கொண்டு குடித்து விடுங்கள்.
ஒரே மாதத்தில் உங்கள் சுகரின் அளவு நார்மலுக்கு வந்துவிடும்.


இப்போது சர்க்கரை வியாதியும் கண்டிப்பாக எல்லோருக்கும் வருகிறது. சில நேரம் கட்டுப் படுத்த முடியாமல் ரொம்ப அதிகமாக போய் விடும் இந்த மாதிரி நேரத்தில் ஒரு மாதம் தொடர்ந்து இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நார்மல் ஆகும். சர்க்கரை வியாதி அதிகமானவர்கள் என்று கிடையாது. கொஞ்சமாக இருப்பவரும் உணவில் பாகற்காயை சேர்த்து கொள்ளுங்கள்

மேலும் சில குறிப்புகள்