மைசூர் பாகு

தேதி: January 9, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை பருப்பு மாவு - முக்கால் கிலோ
சர்க்கரை - இரண்டு கிலோ
ரீபைண்ட் ஆயில் - ஒரு கிலோ
டால்டா - ஒரு கிலோ


 

முதலில் கடலை பருப்பு மாவை லேசாக வெறும் வாணலியில் வறுத்து கொள்ள வேண்டும்.
இரண்டு அடுப்பு ஒன்றாக எரிய வைக்க வேண்டும். ஒரு அடுப்பில் சர்க்கரை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.
மற்றொரு அடுப்பில் எண்ணெய், டால்டா இரண்டையும் சூடுப்படுத்தவும்.
சர்க்கரை நுரைத்து வரும் போது கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு ஒரு ஆள் கிளறனும், டால்டா எண்ணெய் கலவை சூடாக மற்றொரு ஆள் ஊற்றி கிளறனும்.
இப்படி நன்கு சுண்டி மைசூர் பாகு பதம் வந்ததும் பெரிய சதுர வடிவ ட்ரேயில் நெய் தடவி கொட்டி சமப்படுத்தவும்.


இது ஒரு கல்யாண வீட்டுக்கு செய்வது

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலீலா மேடம்,.நன்றி!நன்றி!நன்றி!இப்ப இப்ப இப்பதான் ஒருவழியா உங்க ஸ்டைலில் மைசூர் பாக் கிளறினேன்.நான் 3/4 டம்ளர் அளவில் செய்தேன்.மேடம் நான் டால்டா சேர்க்காது நூர் ஆயில்+அமுல் நெய் கலந்து செய்தேன்.(நான் சாதாரணமாக செய்வது நெய் மட்டும் சேர்த்துதான்)

பார்க்க அழகாக இருக்கிறது.துண்டுகள் போட்டு வைத்துள்ளேன்.சாப்பிடவும் டேஸ்டாகவே ..(வாணலியில் சிறிது மிச்சம் இருந்ததை டேஸ்ட் செய்து என் பையன் குடுத்த கமெண்ட்)உள்ளது என்றான்.
YOUR MIND WILL GIVE BACK EXACTLY WHAT YOU PUT INTO IT.

டியர் அருன் பாலா மைசூர் பாக் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
இது என் நிச்சய தார்த்தம் அப்போது சமையனார் செய்யும் போது சாமான்களை உடன் இருந்து எடுத்து கொடுத்தால் கரைக்டான பதம் எனக்கு தெரிந்தது உடனே டைரியில் எழுதி வைத்து விட்டேன்.
நாஙகள் (மைசூர் பாக் (அ) அதிரசம் சீராக கொடுப்போம்.

ஜலீலா

Jaleelakamal