இட்லி (பெஸ்ட் பிரேக் பாஸ்ட்)

தேதி: January 9, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - இரண்டு கப்
உளுத்தம் பருப்பு - அரை கப்
வெந்தயம் - கால் தேக்கரண்டி
ஜவ்வரிசி - இரண்டு தேக்கரண்டி


 

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் மூன்று மணிநேரம் ஊறவைத்து உளுந்து தனியாகவும், அரிசி தனியாகவும் அரைத்து கலக்கவும்.
அரைத்த மாவு புளித்ததும் இட்லிகளாக இட்லி தட்டில் ஊற்றி எடுக்கவும்.
உளுந்தை ஊறவைத்து பிரிட்ஜில் வைத்து அரைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
ஜவ்வரிசி, வெந்தயத்தை உளுந்துடன் ஊறவைக்கவும்.


வேல்ட்'ஸ் (World's)பெஸ்ட் பிரேக் பாஸ்ட்
ஜுரமாக வந்தவர்களுக்கு, நோயாளிகளுக்கு, வயிற்று வலி உள்ளவர்களுக்கு, அல்சர் உள்ளவர்களுக்கு, வயதானவர்களுக்கு, குழந்தைகளுக்கு நல்ல செரிமானம் ஆகும் ஒரே உணவு இந்த இட்லி தான்.

மேலும் சில குறிப்புகள்