காய்கறி கட்லெட்

தேதி: January 9, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

உருளை கிழங்கு -- 1/4 கிலோ
பீட்ரூட் -- 2 என்னம்
கேரட் -- 2 என்னம்
பச்சை பட்டாணி -- 100 கிராம்
நிலக்கடலை -- 2 டீஸ்பூன் (வறுத்து பொடித்தது)
சிவப்பு மிளகாய் பொடி -- 2 டீஸ்பூன்
கரம் மசாலா -- 1/4 டீஸ்பூன்
தனியா பவுடர் -- 1/4 டீஸ்பூன்
மைதா -- 2 டீஸ்பூன்
ரவை -- 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -- 2 என்னம்
கொத்தமல்லி தழை -- 1 டேபிள்ஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
எண்ணைய் -- பொரிக்க


 

காய்கறிகளை கழுவி கொஞ்சம் பெரியதாக நறுக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைக்கவும்.
மைதாவை சிறிதளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்தில் செய்யவும்.
வேகவைத்த காய்களை நன்றாக மசிக்கவும்.
அதனுடன் மிளகாய் தூள்,பொடித்த நிலக்கடலை, கரம் மசாலா தூள், தனியா தூள், கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், உப்பு போட்டு நன்றாக கலந்து சிறு உருண்டையாக செய்து வடை போல தட்டி மைதாமாவில் முக்கி ரவையில் பிரட்டி வாணலியில் காயவைத்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
டொமொட்டொ கெச்சப்புடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
சுவையான காய்கறி கட்லட் ரெடி.


மேலும் சில குறிப்புகள்