கேரட் அல்வா

தேதி: January 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கேரட் -- 200 கிராம்
சர்க்கரை -- 500 கிராம்
நெய் -- 400 கிராம்
முந்திரி பருப்பு -- 75 கிராம்
மைதா -- தே.அளவு
பால் -- 1 கப்
வென்னிலா எசன்ஸ் -- தே.அ


 

கேரட்டின் தோல் சீவி மிகவும் பொடியாக துருவவும்.
துருவிய கேரட்டை பால் சேர்த்து வேகவிடவும்.
வெந்ததும் நன்கு மசித்து மைதாவை சேர்த்து கலக்கவும்.
பின் சர்க்கரையை பாகு போல் காய்ச்சி கேரட் கலவையை ஊற்றி கைவிடாமல் கிளறவும்.
கலவை சற்று கெட்டியாக வந்தவுடன் நெய் சேர்த்து மறுபடியும் கிளறவும்.
கேரட் சுருண்டு அல்வா பதத்திற்கு வந்து நெய் கசியத்தொடங்கியவுடன் வறுத்த முந்திரி, வென்னிலா எசன்ஸ் சில துளிகள் விட்டு இறக்கி வைத்து ஆறியதும் பறிமாறவும்.
சுவையான தித்திப்பான கேரட் அல்வா ரெடி.


முந்திரியை வறுத்தும் போடலாம் அப்படியேவும் போடலாம்.
வென்னிலா எசன்ச் தேவை என்றால் ஊற்றலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சில தினங்களுக்கு முன்பு கேரட் அல்வா செய்தேன். ஆனால் என் கணவர் கேரட்டின் பச்சை வாசனை வருகிறது என்றார். கேரட் அல்வா செய்யும் போது பச்சை வாசனை போக என்ன செய்வது.

Pavithra babu

சுபா இப்பொழுது படிலளிப்பார் என்று தோன்றவில்லை அவர் பிசியாக இருக்கிறார்..
நல குக்கரில் வேக வைத்து தான் சேர்க்க ச்ல்லியிருக்கிறார் இருந்தும் வாடையா.கேரட்டில் பால் சேர்த்து செய்யும் அல்வாவில் கேரட் பச்சை வாடை வராது.துருவிய கேரட்டை முதலில் சிறிது பட்டரில் வதக்கினாலே கேரட் வாடை போய்விடும்.ட்ரை பன்னி பாருங்க

தளிகா சொல்வது மிக சரி. நான் எப்போதும் முதளில் நெய் விட்டு வதக்கி தான் பால் சேர்ப்பேன். கேரட் வாசம் வரவே வராது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. இன்றைய தினம் என் கணவர் தான் கேரட் அல்வா செய்தார். உங்களது பதில் வருவதற்கு முன்னர் நெய்யில் கேரட்டை போட்டு வதக்கி, பின்னர் சிறிது பால் சேர்த்து நன்றாக வெந்தவுடன், கொஞ்சம் மைதா மாவு, சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து கிளறினார்.

சூடு ஆறியவுடன் கேரட் அல்வாவை சாப்பிட்டேன். மிகவும் அருமையாக வந்திருந்தது. ஆனால் ஒரு சிறிய குறை, இந்தமுறையும் கொஞ்சம் பச்சை வாசனை வந்தது. ஆனால் அவ்வளவாக தெரியவில்லை.

உங்களது உடனடி பதிலுக்கு மிக்க நன்றி!!!!

Pavithra babu

மற்றவருடைய குறிப்பில் வந்து அப்படி சொல்லக் கூடாது என்று சொல்லவில்லை..நிறைய அல்வா குறிப்பு இங்குண்டு அதுவும் ட்ரை பன்னி பாருங்க..எனது குறிப்பிலும் உண்டு அது ஹேடெல் செஃப் டிவியில் செய்து காண்பித்தது நன்றாக வரும்..பால் அளவு 3 கப்பாவது வேண்டும் சுண்ட வேண்டும்.சர்க்கரை கடைசியில் சேர்க்க வேண்டும் .