உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

கொத்த்வரங்காய் பருப்பு உசிலி


இது பிராமண வீடுகளில் கல்யாண விஷேஷங்களுக்கு செய்ய்யும் ஒரு அருமையானா டிஷ் ஆகும்.

தேவையான பொருட்கள்

  • வேகவைக்க
  • ------------
  • கொத்தவரங்காய் - கால் கிலோ(பொடியாக அரிந்தது)
  • உப்பு - தேவைக்கு
  • மஞ்ச பொடி - கால் தேக்கரண்டி
  • ஊற வைத்து அரைக்க
  • ------------------
  • கடலைபருப்பு - அரை கப்
  • மிளகாய் வத்தல் - நான்கு
  • பெருங்காயம் - ஒரு துண்டு
  • உப்பு தேவைக்கு
  • தாளிக்க
  • --------
  • எண்ணை - ஐந்து தேக்க்ரண்டி
  • கடுகு - ஒரு தேக்கரண்டி
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • கருவேப்பிலை - இரண்டு ஆர்க்கு (கிள்ளியது)
  • எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
  • கொத்து மல்லி தழை - அரை கை பிடி பொடியக அரிந்தது

செய்முறை

  • முதலில் கொத்தவரங்கயை கொஞ்சம உப்பு ,மஞ்ச்ச பொடி சேர்ட்து வேகவைக்கவும்.
  • பருப்பையும் மிலகாய் வற்றலையும் அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு பெருங்காய பொடி சேர்த்து அரைக்கவும்.
  • ஒரு பெரிய வானலியில் எண்ணை இரண்டு தேக்கரண்டி ஊற்றி கடுகு,சீரகம்,கருவேப்பிலை போட்டு தாளித்து அரித்த கலவையை போட்டு உதிரியாக நல்ல கிளறி கொண்டே இர்க்கனும்.
  • இடை இடையே கொஞ்சம் மீதி எண்ணை விட்டு கிளறவும்.
  • பிறகு வெந்த கயையும் சேர்த்து நல்ல் கிளறி இரக்கவும்.
  • கடைசியில் எலுமிச்சை சாறு கொத்து மல்லி தழை தூவி இரக்கவும்.
  • சுவையான பருப்பு உசிலி ரெடி.

குறிப்பு:

இதற்கு துவரம் பருப்பு பாதி சேர்ப்பார்கள், இன்னும் ஆவியில் வேகவைப்பார்கள். ஆனால் கிரிஸ்பியாக வராது, அடிக்க்டை அன்றாட உணவுக்கு தயாரிக்க்ம் போது அப்படி செய்யலாம். ஏனென்றால் எண்ணை அதிகம் சேர்ப்பது உடம்புக்கு நல்லதல்ல, ஆனால் விஷேஷத்தில் இப்படிதான் செய்யனும். இதில் கொத்தவரைக்கு பதிலாக, பீன்ஸ்,கேபேஜ்,கேரட் சேர்க்கலாம்.கேபேஜ் கேரட் ஏதவது ஒன்று போட்டு செய்தால் குழந்தை களுக்கு காய் அனைத்து சுலபமாக உள்ளே போய் விடும்

வழங்கியவர்

Jaleela


comments